

தேர்தலில் படுதோல்வி அடைந்த தற்கு கட்சியின் விளம்பரங்களை கவனித்துக்கொண்ட ஜப்பானைச் சேர்ந்த டென்ட்ஸு நிறுவனம்தான் காரணம் என்று காங்கிரஸ் தலைவர் கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.
இந்த தேர்தலில் காங்கிரஸ் பிரச்சாரத்திற்கு தேவையான உத்திகளை வகுக்க டென்ட்ஸு விளம்பரம் மற்றும் மக்கள் தொடர்பு நிறுவனத்தை அக்கட்சி பணியில் அமர்த்தியிருந்தது. இதற்கென அந்நிறுவனத்துக்கு ரூ. 600 கோடியை கட்டணமாக தர காங்கிரஸ் ஒப்புக்கொண்டது.
சாமானியர்களின் வாழ்வை மேம்படுத்த வழிகாட்டத் துடிக் கும், ஆற்றல்மிக்க இளம் தலைவர் ராகுல் காந்தி என்று, அவர் மீதான அபிப்பிராயத்தை கட்டியெழுப்ப வேண்டும் என்பதே இந்நிறுவனத் திற்கு வழங்கப்பட்ட முக்கிய பணி யாகும். ஆனால், பாஜகவோடு ஒப்பிடுகையில் காங்கிரஸின் பிரச்சாரம் எடுபடவில்லை.
இது தொடர்பாக காங்கிரஸ் மூத்த தலைவர் ஒருவர் கூறுகை யில், “தேர்தல் தோல்விக்கு டென்ட்ஸுவின் செயல்பாடு எதிர் பார்த்த வகையில் இல்லாததும் ஒரு காரணமாகும். தான் உருவாக்கும் விளம்பரங்களுக்கு மிக அதிக கட்டணத்தை அந்நிறுவனம் பெற் றுக்கொண்டது. ஊடகங்களில் அந்த விளம்பரங்களை அதிக கட்ட ணத்துக்கு வெளியிட்டது” என்றார்.
இதற்கு மறுப்புத் தெரிவித்த டென்ட்ஸு நிறுவனத்தின் இந்திய செய்தித்தொடர்பாளர், “நிதி சார்ந்த விவகாரங்கள் அனைத்தும் வெளிப் படைத்தன்மையுடன் கையாளப் பட்டது. அது தொடர்பான ஒப்பந்தம் பிரச்சாரம் தொடங்கு வதற்கு முன்பே ஏற்படுத்தப்பட்டது.
கட்சி (வாடிக்கையாளர்), நிறுவனம், விளம்பரம் வெளி யாகும் ஊடகம் ஆகிய முத்தரப்பும் இணைந்துதான் விளம் பர வெளியீட்டை மேற்கொண்டன.
எங்கள் நிறுவனத்தைத் தவிர, வேறொரு நிறுவனத்தின் மூலமும் விளம்பரங்களை காங்கிரஸ் கட்சி வெளியிட்டுள்ளது” என்றார்.
இந்நிலையில், அதிக கட்டணத் தில் விளம்பரங்களை வெளியிட் டது தொடர்பாக டென்ட்ஸு நிறு வனத்தின் இந்திய செயல் தலைவர் ரோஹித் ஓரிக்கும், காங்கிரஸின் மக்கள் தொடர்புப் பிரிவுத் தலைவர் அஜய் மக்கானுக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டதாக மூத்த காங்கிரஸ் தலைவர் ஒருவர் தெரிவித்துள்ளார்.