

குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி நேற்று ஹைதராபாத்துக்கு வந்தார். இவரை தெலங்கானா முதல்வர் கே.சந்திரசேகர ராவ் மற்றும் ஆளுநர் நரசிம்மன் உள்ளிட்டோர் வரவேற்றனர். பிரணாப் இங்கு 10 நாட்களுக்கு தங்கி ஓய்வெடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆண்டுதோறும் குளிர் காலத்தில் ஹைதராபாத்தில் உள்ள குடியரசுத் தலைவர் மாளிகையில் குடியரசு தலைவர் தங்கி ஓய்வெடுப்பது வழக்கம். ஆனால் கடந்த குளிர் காலத்தில் உடல்நிலை சரியில்லாத காரணத்தால் இப்போதைய குடி யரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி ஹைதராபாத் வர இயலவில்லை.
இந்நிலையில், பிரணாப் முகர்ஜி இந்திய விமானப் படைக்கு சொந்த மான விமானம் மூலம் நேற்று ஹைதராபாத் வந்தார். முன்னதாக, ஆளுநர் நரசிம்மன், தெலங்கானா முதல்வர் கே.சந்திரசேகர ராவ் மற்றும் அமைச்சர்கள், உயர் அதி காரிகள் உள்ளிட்டோர் ஹகிம் பேட்டையில் உள்ள விமானப்படை நிலையத்துக்கு சென்று பிரணாபை வரவேற்றனர். அப்போது குடியரசு தலைவருக்கு பூச்செண்டு கொடுத்த சந்திரசேகர ராவ், பிரணாபின் பாதத்தைத் தொட்டுவணங்கி வரவேற்றார். ஜூலை 8-ம் தேதி வரை பிரணாப் முகர்ஜி இங்கு தங்கி ஓய்வெடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.