பருவ மழை தொடங்குவதில் தாமதம்: கர்நாடக அணைகளுக்கு நீர்வரத்து குறைந்தது

பருவ மழை தொடங்குவதில் தாமதம்: கர்நாடக அணைகளுக்கு நீர்வரத்து குறைந்தது
Updated on
1 min read

காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பருவ‌ மழை இன்னும் தொடங் காததால் அணைகளுக்கு வரும் நீர்வரத்து குறைந்து காணப் படுகிறது. அணைகளில் இருந்து நீர் வெளியேற்றம் நிறுத்தப்பட் டுள்ளதால் கரும்பு விவசா யிகள் கடும் சிரமத்துக்கு ஆளாகி யுள்ளனர்.

நேற்று மாலை நிலவரப்படி 124.80 அடி கொள்ளளவைக் கொண்ட கிருஷ்ணராஜ சாகர் அணையின் நீர்மட்டம் 76.40 அடியாக இருந்தது. அணைக்கான நீர்வரத்து வினாடிக்கு 797 கன அடியாகவும் வெளியேற்றப்படும் நீரின் அளவு 400 கன அடியாகவும் இருந்தது. கடல் மட்டத்தில் இருந்து 2,284 அடி உயரத்தில் உள்ள கபினி அணையில் 2,265.77 அடி நீர் இருக்கிறது. இதில் நீர்வரத்து வினாடிக்கு 374 கன அடியாகவும் நீர் வெளியேற்றம் 500 கன அடியாகவும் உள்ளது. இதேபோல கடல் மட்டத்தில் இருந்து 2,859 அடி உயரத்தில் உள்ள‌ ஹாரங்கி அணையில் 2,809 அடி நீர் இருப்பு உள்ளது. இதற்கான நீர் வரத்து வினாடிக்கு 200 கன அடியாகக் குறைந்து காணப்படுவதால், நீர் வெளியேற்றப்படவில்லை.

காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் ஜூன் மாத கடைசியில் பருவ மழை தொடங் கிய பிறகே அணைகளுக்கு நீர் வரத்து அதிகரிக்கும். அதே போல கேரளாவில் வயநாடு பகுதியில் மழை பெய்யத் தொடங் கினால்தான் கபினி அணைக்கு நீர்வரத்து அதிகரிக்கும். அதன் பிறகே காவிரியின் குறுக்கே அமைந்துள்ள அணைகளில் இருந்து தமிழகத்துக்கு தண்ணீர் திறந்துவிடப்படும் என நீர்ப்பாசனத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in