Published : 06 Jun 2015 09:15 AM
Last Updated : 06 Jun 2015 09:15 AM

காவிரியில் கழிவுநீர் கலப்பதை தடுக்க கோரி உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மனு

கர்நாடகாவில் இருந்து தமிழகத் துக்கு வரும் காவிரி நீரில் கழிவுநீர் கலப்பதை தடுக்க வேண்டும் என்று கோரி உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு நேற்று மனு தாக்கல் செய்தது.

பெங்களூரு கழிவு நீர் மேம்பாடு குறித்து கர்நாடக சட்டமேலவையில் அம்மாநில சிறுபாசனத் துறை அமைச்சர் சிவராஜ் தங்கடகி கடந்த மார்ச் மாதம் விளக்கம் அளித்தார்.

அப்போது அவர் பேசியதாவது: பெங்களூருவில் உள்ள வீடுகள், அலுவலகங்கள், தொழிற்சாலை கள் ஆகியவற்றில் இருந்து தினமும் சுமார் 1.5 மில்லியன் லிட்டர் கழிவுநீர் வெளியேறுகிறது. இந்த கழிவு நீர் கால்வாய்கள் மூலம் வெளியேறி அர்க்காவதி, தென் பெண்ணை, காவிரி உள்ளிட்ட ஆறுகளில் கலக்கிறது. இந்த நீர் கர்நாடகத்தில் இருந்து தமிழகத்துக்கு செல்கிறது என்று தெரிவித்தார்.

காவிரியில் கலக்கும் கழிவுநீரால் தமிழக மக்களுக்கு காலரா, மலேரியா, மஞ்சள் காமாலை, டைபாய்டு உள்ளிட்ட பல நோய் கள் ஏற்படுகின்றன. இதனை கர்நாடக அரசு உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும் என தமிழக அரசியல் கட்சிகளும் விவசாய அமைப்புகளும் வலியுறுத்தின.

இந்த விவகாரம் தொடர்பாக தமிழக அரசு சார்பில் கர்நாடக அரசுக்கு எதிராக‌ உச்ச நீதிமன்றத் தில் நேற்று மனு தாக்கல் செய்யப் பட்டது. அந்த மனுவில் கூறியிருப்ப தாவது:

கர்நாடகா கழிவுநீரை காவிரி ஆற்றில் கலக்கிறது. இதனால் தமிழகத்துக்கு வரும் காவிரி நீர் கடுமையாக மாசடைகிறது. எனவே காவிரி யில் கழிவுநீர் கலப்பதை தடுக்க நடவடிக்கை எடுக்க கர்நாடக அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று மனுவில் வலியுறுத்தப்பட் டுள்ளது.

சித்தராமையா பதில்

இது தொடர்பாக கர்நாடக முதல்வர் சித்தராமையா நேற்று கூறியதாவது:

காவிரியில் கழிவு நீர் கலப்பது தொடர்பாக தமிழக அரசு புதிய வழக்கு தொடுத்திருப்பதாக செய்தி வந்துள்ளது. தமிழக அரசின் மனுவை எதிர்கொள்வது தொடர்பாக சட்ட நிபுணர்களுடன் ஆலோசிக்கப்படும். தமிழக அரசின் மனுவை சட்டப்படி சந்திக்க தயாராக இருக்கிறோம். இது தொடர்பாக பதில் மனு தாக்கல் செய்யுமாறு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்ட பிறகு, எங்கள் தரப்பு வாதத்தை முன்வைப்போம்'' என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x