

மத்திய ரசாயனம் மற்றும் உரத் துறை இணை அமைச்சர் ஹன்ஸ் ராஜ் கங்காராம் ஆஹிர் நேற்று கூறியதாவது:
நெஸ்லே நிறுவனத்தின் செரலாக் மற்றும் நெஸ்டம், ஜான்சன் அன்ட் ஜான்சன் நிறுவனத்தின் குழந்தைகள் சோப் மற்றும் எண் ணெய் மற்றும் இதுபோன்ற இதர நிறுவனங்களின் குழந்தைகளுக் கான தயாரிப்புகள் மருந்து கடை களில் விற்பனை செய்யப்படுகிறது.
உடல்நலத்துக்கு நல்லது என்று கருதி குழந்தைகளுக்கான உணவு மற்றும் துணை பொருட்களை பொது மக்கள் மருந்து கடைகளிலிருந்து வாங்குகின்றனர். அதிக அளவில் குழந்தைகளால் சாப்பிடப்படும் மேகி நூடுல்ஸ் விவகாரத்தில் என்ன நடந்தது என்பதை அறிவோம். எனவே, குழந்தைகளுக்கான உணவு மற்றும் துணை பொருட்கள் மருந்து கடைகளில் விற்பனை செய்யக்கூடாது.
மேலும் சீரான உடலமைப்பைப் பெறுவதற்கான ஊட்டச்சத்து பொருட்களையும் மருந்து கடை களில் விற்க அனுமதிக்கக் கூடாது. மருந்து பொருட்களை மட்டுமே விற்க அனுமதிக்க வேண்டும். இதுகுறித்து மத்திய அரசு பரிசீலித்து வருகிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.