Last Updated : 17 Jun, 2015 09:21 AM

 

Published : 17 Jun 2015 09:21 AM
Last Updated : 17 Jun 2015 09:21 AM

நிலம் கையகப்படுத்தும் மசோதா தொடர்பாக நாடாளுமன்ற கூட்டுக் குழுவிடம் குவியும் யோசனைகள்: மாநில அரசுகளுக்காக காத்திருக்கும் எஸ்.எஸ். அலுவாலியா

நிலம் கையகப்படுத்தும் மசோதாவை ஆராய்ந்து வரும் நாடாளுமன்ற கூட்டுக்குழுவிடம் இம்மசோதா தொடர்பாக யோசனைகள் குவிகின்றன.

குழுவின் தலைவரான எஸ்.எஸ்.அலு வாலியா இவற்றை விட மாநில அரசுகளின் யோசனைக்காக ஆர்வமுடன் காத்திருப்பதாகக் கூறப்படுகிறது.

நாடாளுமன்ற கூட்டுக்குழுவின் வேண்டுகோளை தொடர்ந்து முந்நூறுக்கும் மேற்பட்ட யோச னைகள் இக்குழுவிடம் குவிந் துள்ளன. இவை சமூக ஆர்வலர் அண்ணா ஹசாரே, ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் விவசாயப் பிரிவான பாரதிய கிசான் சங்கம் மற்றும் பல்வேறு பொதுநல அமைப்புகளிடம் இருந்து வந்துள்ளன.

இது குறித்து ‘தி இந்து’விடம் நாடாளுமன்ற கூட்டுக்குழு உறுப் பினர்கள் கூறும்போது, “குழு முன்பு பொதுநல அமைப்புகள் மற்றும் விவசாய சங்கங்களின் பிரதிநிதிகள் தங்கள் கருத்துகளை முன்வைத்து வருகின்றனர்.

இவர்கள் சார்பில் அனுப்பப் பட்ட யோசனைகள் இதுவரை குழுவில் விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்படவில்லை.

மாநில அரசுகளின் யோச னைகளை பெற்று அதன் மீது மட்டும் விவாதம் நடத்தி ஆதரவு பெறும் யோசனையில் குழுவின் தலைவர் இருப்பதாகத் தோன்றுகிறது” என்றனர்.

நிலம் கையகப்படுத்தும் மசோதா, பிரதமர் நரேந்திர மோடி ஆட்சியில் அதிக அளவில் சர்ச்சையில் சிக்கி, 2 முறை அவசரச் சட்டமாக பிரகடனம் செய்யப்பட்டது.

இந்த மசோதா வுக்கு மாநிலங் களவையில் கிளம்பிய கடும் எதிர்ப்பால், நாடாளுமன்ற இரு அவைகளின் உறுப்பினர்கள் கொண்ட கூட்டுக் குழுவுக்கு பரிந்துரை செய்யப் பட்டது. பாஜக எம்.பி. எஸ்.எஸ்.அலுவாலியா தலைமையில் இரு அவைகளின் 30 எம்.பி.க்களை கொண்ட குழுவின் கூட்டம் தொடர்ந்து ஒவ்வொரு வாரமும் நடைபெற்று வருகிறது.

கடந்த மாதம் நடைபெற்ற முதல் கூட்டத்தில், மசோதாவின் ஷரத்துகளை தெளிவாகப் புரிந்து கொள்ளாமல் அதன் மீது பெரும்பாலானவர்கள் பொதுப் படையாகவும், மேலோட்டமாகவும் பேசி வருவதாக தெரிவிக்கப் பட்டது.

இதை மாற்றுவதற்கு அனைத்து மாநிலங்களின் தலைமைச் செயலாளர்கள், பொது நல அமைப்புகள் மற்றும் விவசாய சங்கங்களிடம் கருத்துகளை கேட்டு கடிதம் அனுப்புவது என முடிவானது.

இதற்கு, பிஹாரின் நிதிஷ் குமார், மேற்கு வங்கத்தின் மம்தா பானர்ஜி, உ.பி.யின் அகிலேஷ் யாதவ், திரிபுராவின் மாணிக் சர்க்கார், டெல்லியின் அர்விந்த் கேஜ்ரிவால் ஆகிய முதல்வர்கள் நில மசோதாவில் அதிகமான மாற்றங்கள் வேண்டி கூட்டுக்குழுவுக்கு கடிதம் எழுதவிருப்பதாக தெரிகிறது. காங்கிரஸ் ஆளும் மாநில முதல்வர்கள், இந்த மசோதா முந்தைய ஆட்சியில் இருந்த நிலையிலேயே இருக்க வேண்டும் என்று கடிதம் எழுதவிருப்பதாக கூறப்படுகிறது.

இந்த யோசனைகள் மீது கூட்டுக் குழு விரைவாக ஆலோசனை செய்து தனது அறிக்கையை அடுத்த நாடாளுமன்றக் கூட்டம் தொடங்குவதற்கு முன் மத்திய அரசிடம் சமர்ப்பிக்க திட்டமிட் டிருந்தது.

ஆனால் நாடாளுமன்றக் குழு முன் மேலும் பல்வேறு பொதுநல அமைப்புகள் மற்றும் விவசாய அமைப்புகள் நேரில் ஆஜராகி தங்கள் வாதங்களை வைக்க விரும்புகின்றன.

இதனால் திட்ட மிட்ட தேதியை விட தாமத மாகவே இக்குழு தனது அறிக் கையை சமர்ப்பிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x