Last Updated : 09 Jun, 2015 08:44 AM

 

Published : 09 Jun 2015 08:44 AM
Last Updated : 09 Jun 2015 08:44 AM

தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் மத்திய தகவல் ஆணையத்திடம் விவரம் கேட்டு 40 ஆயிரம் மனுக்கள் நிலுவை

மத்திய தகவல் ஆணையர் (சிஐசி) பதவி கடந்த 9 மாதங் களாக காலியாக இருந்த நிலையில், தகவல் பெறும் உரிமை சட்டத்தின் (ஆர்டிஐ) கீழ் ஆணையத்தால் பெறப்பட்டுள்ள 40 ஆயிரம் மனுக்கள் நிலுவையில் உள்ளது தெரியவந்துள்ளது.

தலைமை தகவல் ஆணையராக இருந்த ராஜீவ் மாத்தூரின் பதவிக் காலம் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 22-ம் தேதி முடிந்தது. கடந்த 9 மாதங்களாக காலியாக இருந்த இந்தப் பதவிக்கு இப்போது தகவல் ஆணையராக உள்ள விஜய் சர்மா நேற்று நியமிக்கப்பட்டார்.

இந்நிலையில், சிஐசி அலு வலக புள்ளிவிவரப்படி, ஆர்டிஐ சட்டத்தின் கீழ் பெறப்பட்ட 32,531 மேல் முறையீட்டு மனுக்கள் மற்றும் 7,520 புகார்கள் உட்பட மொத்தம் 40,051 மனுக்கள் நிலுவையில் உள்ளன. இவற்றில் 15,736 மனுக்கள் தலைமை தகவல் ஆணையரின் அமர்வு முன்பு நிலுவையில் உள்ளன.

மற்ற மனுக்கள் விஜய் சர்மா, பசந்த் சேத், யஷோவர்தன் ஆசாத், சரத் சபர்வால், மஞ்சுளா பிரஷர், எம்.ஏ.கான் யூசுபி மற்றும் மதபூஷணம் தர் ஆச்சார்யுலு ஆகிய 7 தகவல் ஆணையர்களின் முன்பு நிலுவையில் உள்ளன. மேலும் 3 தகவல் ஆணையர்கள் பதவி காலியாக உள்ளன.

மத்திய தகவல் ஆணையம், மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையம் மற்றும் லோக்பால் ஆகிய அமைப்புகளின் தலைவர்களை நியமிப்பதில் மத்திய அரசு காலதாமதம் செய்து வருவதாக காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியும் துணைத் தலைவர் ராகுல் காந்தியும் கடந்த மாதம் குற்றம்சாட்டி இருந்தனர்.

மேலும் தலைமை தகவல் ஆணையர் மற்றும் தகவல் ஆணையர் பணியிடங்களை நீண்ட காலமாக காலியாக வைத் திருப்பதன் மூலம் வெளிப் படைத்தன்மைக்கு இலக்கண மாக திகழும் இந்த அமைப்பின் முக்கியத்துவத்தை படிப்படி யாகக் குறைக்க மத்திய அரசு திட்டமிட்டிருப்பதாக ஆர்டிஐ ஆர் வலர்கள் குற்றம்சாட்டி இருந்தனர்.

தகவல் அறியும் உரிமை ஆர்வலர் லோகேஷ் பத்ரா கூறும் போது, “இப்போது தகவல் ஆணையராக உள்ள விஜய் சர்மா டிசம்பர் 1-ம் தேதி ஓய்வு பெற உள்ளார். இந்நிலையில், இவர் அடுத்த தலைமை தகவல் ஆணையராக நியமிக்கப்பட்டிருப் பது வேடிக்கையாக உள்ளது” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x