

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை எதிர்த்து உமா பாரதி ரேபரெலி தொகுதியில் போட்டியிட போவதில்லை என பாஜக தெரிவித்துள்ளது.
உத்தர பிரதேச மாநிலம் ரெபரேலி தொகுதியில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தொடர்ந்து போட்டியிட்டு வெற்றி பெற்று வருகிறார். வர இருக்கும் மக்களவை தேர்தலிலும் அந்த தொகுதியில் போட்டியிட முடிவு செய்துள்ளார். பாஜக சார்பில் சோனியாவை எதிர்த்து அந்த தொகுதியில் உமா பாரதியை போட்டியிட வைக்க அந்த கட்சி யூகிப்பதாக தகவல் வெளியானது.
இந் நிலையில் இன்று பாஜக செய்தித் தொடர்பாளர் சுதன்ஷு திருவேதி செய்தியாளர்களிடம் கூறுகையில், ” ரேபரெலி தொகுதியில் சோனியாவை எதிர்த்து உமா பாரதியை பாஜக நிறுத்த போவதில்லை.மேலும் ராகுல் மற்றும் சோனியா காந்தி தொகுதிக்கான வேட்பாளர்களை பாஜக விரைவில் அறிவிக்கும்” என அவர் கூறியுள்ளார்.
இது குறித்து உமா பாரதி கூறுகையில், நான் ஜான்ஸி தொகுதியை விட்டு வர முடியாது. அதே சமயம் அவர் கட்சி முடிவு செய்தால் ஜான்ஸி தொகுதியுடன் ரேபரெலி தொகுதியிலும் போட்டியிடுவதாக கூறியுள்ளார்.