

திருப்பதி கோவிந்தராஜர் கோயில் பிரம்மோற்சவ விழா வை முன்னிட்டு, நேற்று காலையில் உற்சவ மூர்த்தி களின் தேரோட்டம் வெகு விமரிசையாக நடைபெற்றது.
திருப்பதியில் புகழ்பெற்ற கோவிந்தராஜ சுவாமி கோயில் பிரம்மோற்சவம் நடைபெற்று வருகிறது. இதில் 8-ம் நாளான நேற்று காலை உற்சவ மூர்த்திகள் சிறப்பு அலங்காரத்தில் தேரில் பவனி வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தனர். அப்போது ஏராளமான பக்தர்கள் ‘கோவிந்தா கோவிந்தா’ என கோஷமிட்டபடி தேரை வடம் பிடித்து இழுத்து நேர்த்திக் கடன் செலுத்தினர். மேலும் வழிநெடுகிலும் பக்தர்கள் உப்பு, மிளகு, நாணயங்களை இறைத்தும் நேர்த்திக் கடன் செலுத்தி வழிபட்டனர்.