என்னை கைது செய்ய நினைத்தால் தெலங்கானா அரசு கவிழும்: சந்திரசேகர ராவுக்கு சந்திரபாபு நாயுடு எச்சரிக்கை

என்னை கைது செய்ய நினைத்தால் தெலங்கானா அரசு கவிழும்: சந்திரசேகர ராவுக்கு சந்திரபாபு நாயுடு எச்சரிக்கை
Updated on
1 min read

தேர்தல் முறைகேடுகள் தொடர் பாக ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவுக்கும் தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவுக்கும் இடையில் மோதல் முற்றி வருகிறது. இந்நிலையில், 'சந்திர சேகர ராவ் என்னைக் கைது செய்தால், அதுவே அவரது அரசின் கடைசி தினமாக இருக்கும்' என்று சந்திரபாபு நாயுடு கூறியுள்ளார்.

தெலங்கானா மேலவைத் தேர்த லில் தெலுங்கு தேசம் கட்சிக்கு வாக்களிக்க தெலங்கானா ராஷ்டிர சமிதி கட்சி எம்எல்ஏ எல்விஸ் ஸ்டீபன்சன்னுக்கு, தெலுங்கு தேசம் கட்சி எம்எல்ஏ ரேவந்த் ரெட்டி லஞ்சம் கொடுக்க முயன்றதாக குற்றம்சாட்டப் பட்டுள்ளது.

மேலும் இதுதொடர்பாக நாயுடுவுக்கும் எல்விஸ் ஸ்டீபன்சன்னுக்கும் இடையே நடந்த பேச்சுவார்த்தை குறித்த தொலைபேசி உரையாடலும் வெளியாகியுள்ளது.

இந்நிலையில், மேற்கண்ட விஷயங்கள் தொடர்பாக தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியில் சந்திரபாபு நாயுடு மேலும் கூறியதாவது:

என்னுடைய தொலைபேசி ஒட்டுக்கேட்கப்பட்டதோ அல்லது எங்களைப் போன்ற குரல் உடை யவர்களை வைத்து சித்தரிக்கப் பட்டதோ. எதுவாக இருந்தால் எனக்கென்ன? அதற்கு நான் ஏன் பதில் சொல்ல வேண்டும்?

நாம் இப்போது இரண்டு மாநிலங்கள். இரண்டுமே தெலுங்கர்களின் நலனுக்காகத் தான் இயங்குகின்றன. நம் இரண்டு மாநிலங்களின் வளர்ச்சிக்காக நாம் இருவரும் இணைந்து செயல்பட வேண்டும் என்று பலமுறை கூறியுள்ளேன்.

ஆனால் இத்தனைக்கு பிறகும், என்னுடைய நற்பெய ருக்குக் களங்கம் விளைவிக்கும் வகையில் அவர் செயல்பட்டு வருகிறார்.

தெலங்கானாவில் இருந்து நான் எம்எல்ஏக்களை எடுத்து வருவதாக அவர் குற்றம் சாட்டுகிறார். ஆனால் உண்மையில் அவர்தான் என்னுடைய கட்சி எம்எல்ஏக்களை தன் பக்கம் இழுத்து அவர்களை அமைச்சராகவும் ஆக்குகிறார். அதன் மூலம் என் கட்சியை உடைக்கப் பார்க்கிறார். இதனை தட்டிக் கேட்காமல் ஆளுநரும் அமைதியாக இருக்கிறார்.

இவ்வாறு அவர் கூறினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in