

அமெரிக்காவில் உள்ள இந்திய தூதகரத்தில் பணியாற்ற விரும்பும் அதிகாரிகள் 250 வார்த்தைகளில் கட்டுரையும் எழுதவேண்டும் என்று மத்திய அரசு கூறியுள்ளது. வாஷிங்டன் நகரில் உள்ள இந்தியத் தூதரகத்தின் பொருளாதாரப் பிரிவில் உயரதிகாரிக்கான பணியிடம் காலியாக உள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் இப்பதவிக்கு விண்ணப் பிக்கலாம் என்று அதிகாரிகளுக்கு மத்திய பணியாளர் நலத்துறை சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.
அதில், “54 வயதுக்குட்பட்ட, ஊழல் வழக்கு எதுவும் இல்லாத, மத்திய அரசின் அயல்பணிக்கு தடை விதிக் கப்படாத அதிகாரிகள் இப் பதவிக்கு விண்ணப்பிக்கலாம். இப்பதவிக்கு, வர்த்தகம், தொழில், நிதி, வெளிநாட்டு முதலீடு, ஏற்றுமதி மேம்பாடு உள்ளிட்ட துறைகளில் முன் அனுபவம் அவசியம்.
கட்டாயத் தகுதிகள் மற்றும் அனுபவம் கொண்ட அதிகாரிகள் தங்கள் சுய விவரக் குறிப்புடன் இப்பதவிக்கு தாங்கள் பொருத்த மானவர் என்று கருதுவதற்கான காரணம் குறித்து 250 வார்த்தை களில் கட்டுரை எழுதவேண்டும்” என்றும் கூறப்பட்டுள்ளது.