Last Updated : 18 Jun, 2015 08:55 AM

 

Published : 18 Jun 2015 08:55 AM
Last Updated : 18 Jun 2015 08:55 AM

வெற்று வாக்குறுதிகளால் மாற்றம் வராது: மோடி, கேஜ்ரிவாலுக்கு எதிராக ராகுல் ஆவேசப் பேச்சு

‘‘பிரதமர் நரேந்திர மோடியும், டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவாலும் அளிக்கும் வெற்று வாக்குறுதிகளால் மாற்றங்கள் வந்துவிடாது’’ என்று காங்கிரஸ் துணை தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டினார்.

டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் சுகாதாரத் துறை ஊழியர்கள், தங்கள் 3 மாத சம்பள பாக்கியை வழங்கக் கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். முதல்வர் கேஜ்ரிவாலுக்கு எதிராக ஊழியர்கள் கோஷம் எழுப்பினர். அவர்களுக்கு ஆதரவளித்து ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற ராகுல் காந்தி பேசியதாவது:

இந்தப் போராட்டம் டெல்லியை தூய்மைப்படுத்துவதற்கான போராட்டம் மட்டுமல்ல. நாட்டின் தூய்மைக்கான போராட்டமும் ஆகும். இதில் என்னுடைய பலத்தையும் சேர்க்க விரும்புகிறேன். நாம் இணைந்து நம் பலம் என்ன என்பதை காட்டுவோம். பிரதமர் மோடிஜியும், முதல்வர் கேஜ்ரிவாலும் வெற்று வாக்குறுதிகளை அளித்து வருகின்றனர். அப்படி செய்தால் மாற்றங்கள் நிகழ்ந்து விடும் என்று நினைக்கின்றனர். வளர்ச்சி என்ற பெயரில் மத்திய அரசும், டெல்லி அரசும் ஏழைகளின் உரிமைகளை பறித்து வருகின்றன.

நான் உங்களுக்காக பேச வந்திருக்கிறேன் என்று நீங்கள் நினைக்கலாம். இந்த பேச்சு உங்களுக்காக மட்டுமல்ல. நாட்டில் உள்ள ஒடுக்கப்பட்ட ஏழை விவசாயிகள், தொழிலாளிகள், சுகாதாரத் துறை ஊழியர்கள் அனைவருக்குமானது. பின்தங்கிய மக்களின் வளர்ச்சிக்காக தொடர்ந்து போராடுவேன். நான் உங்களுக்காக எங்கு வேண்டுமானாலும் வருவேன். ஒரு நாள் அல்ல, 10 நாட்கள், 50 நாட்கள், 100 நாட்கள் என்றால் கூட உங்களுடன் நின்று போராட நான் தயார்.

சத்தீஸ்கர் பயணம் மேற் கொண்ட போது, அங்குள்ள ஏழை விவசாயிகளிடம் பேசினேன். அங்குள்ள நிலக்கரி சுரங்கத்தை என் வாழ்நாளில் முதல் முறையாகப் பார்த்தேன்.

முப்பது ஆண்டுகளுக்கு குத்தகை எடுத்துள்ள தொழிலதி பர்கள் நாள் ஒன்றுக்கு ரூ.1 கோடி லாபம் ஈட்டுவதாக அந்த விவசாயிகள் கூறினர். ஆனால், அந்த ஏழை விவசாயி களின் நிலத்தை ரூ.50 ஆயிரத் துக்கும் ரூ.1 லட்சத்துக்கும் பிடுங் கிக்கொண்டுள்ளனர்.

இதுபோன்ற வளர்ச்சி தேவை யில்லை. ஏழை விவசாயிகளின் நிலங்களை பிடுங்கி பார்முலா ஒன் ட்ராக் போடுகின்றனர். அந்த சாலையில் 400 கி.மீ. வேகத்தில் கார்கள் செல்லலாம். இது வளர்ச்சிக்கானது என்று அரசு கூறுகிறது.

இவ்வாறு ராகுல் காந்தி பேசினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x