நாட்டு குண்டு வெடித்து 2 பேர் பலி; 4 பேர் காயம்
கேரள மாநிலம் தலசேரியில் நேற்று நாட்டு வெடிகுண்டு வெடித்து இரண்டு பேர் பலியாயினர். மேலும் நான்கு பேர் படுகாயமடைந்தனர்.
தலசேரியில் கொல்லவல்லூர் எனும் இடத்தில் நாட்டு வெடிகுண்டு தயாரிக்கப்பட்டு வந்தது. அப்போது அந்த வெடிகுண்டுகளில் ஒன்று வெடித்தது. அதில் இரண்டு பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் நான்கு பேர் படுகாயமடைந்தனர்.
காயமடைந்தவர்களில் இரு வரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாகக் கூறப்பட்டுள்ளது. இவர்கள் அனைவரும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தொண்டர்கள் என்பது தெரியவந்துள்ளது. இதுகுறித்து போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கொல்லவல்லூரில் பாஜக மற்றும் சிபிஎம் கட்சியினருக்கு இடையே சமீபகாலமாக மோதல் சம்பவங்கள் அதிகரித்து வருகின் றன. இந்தப் பகுதியில் அமைதியை நிலைநாட்ட இரு கட்சியினருக்கும் இடையே பேச்சு வார்த்தை நடத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன.
இந்நிலையில், இந்த குண்டுவெடிப்புச் சம்பவம் நிகழ்ந் துள்ளதைத் தொடர்ந்து, சிபிஎம் கட்சியினர் அமைதி நடவடிக்கை களை கெடுக்க முயற்சிப்பதாக பாஜகவினர் குற்றம் சாட்டியுள்ளனர்.
