

டெல்லியில் கடந்த 21-ம் தேதி சர்வதேச யோகா தினம் கொண் டாடப்பட்டது. பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில் குடியரசு துணைத் தலைவர் ஹமீது அன்சாரி மட்டும் கலந்து கொள்ளவில்லை.
அவர் ஏன் பங்கேற்கவில்லை என்பது குறித்து பராஸ் நாத் என்பவர் தகவல் அறியும் உரிமை சட்டத்தில் விண்ணப்பித்திருந்தார். அதற்கு இரண்டே நாளில் அன்சாரி பதில் அளித்துள்ளார். அந்த பதிலில், அழைப்பிதழ் அனுப்பப்படாததால் விழாவில் பங்கேற்கவில்லை என்று குறிப்பிட்டுள்ளார்.