சுஷ்மா, வசுந்தரா சிக்கல்: மோடி-அமித் ஷா தீவிர ஆலோசனை

சுஷ்மா, வசுந்தரா சிக்கல்: மோடி-அமித் ஷா தீவிர ஆலோசனை
Updated on
1 min read

ஊழல் புகாரில் சிக்கிய லலித் மோடிக்கு விசா பெற வெளியுறவு அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ், ராஜஸ்தான் முதல்வர் வசுந்தரா ராஜே ஆகியோர் உதவிய விவகாரத்தால் எழுந்துள்ள நெருக்கடி நிலை குறித்து பிரதமர் மோடியும் பாஜக தேசிய தலைவர் அமித் ஷா தீவிர ஆலோசனை மேற்கொண்டுள்ளனர்.

முன்னதாக நேற்று மாலை உ.பி. மாநில விவசாயிகள் பிரதிநிதிகளுடன் பிரதமர் நரேந்திர மோடியை அவரது இல்லத்தில் அமித் ஷா சந்தித்தார். விவசாயிகள் பிரதிநிதிகள் சந்திப்பு முடிந்த பிறகு பிரதமருடன் அமித் ஷா தனியாக ஆலோசனை மேற்கொண்டுள்ளார்.

மோடி - ஷா சந்திப்பின்போது, ஊழல் புகாரில் சிக்கிய லலித் மோடிக்கு விசா பெற வெளியுறவு அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ், ராஜஸ்தான் முதல்வர் வசுந்தரா ராஜே ஆகியோர் உதவிய விவகாரத்தால் கட்சிக்கு ஏற்பட்டுள்ள சேதங்களை சரி செய்வது குறித்து விரிவாக ஆலோசித்ததாகத் தெரிகிறது.

இவ்விவகாரம் தொடர்பாக ஆர்.எஸ்.எஸ். தலைவர்களுடன் அமித் ஷா ஆலோசனை நடத்தியுள்ளார்.

லலித் மோடி விசா விவகாரத்தில் பாஜக தலைவர்கள் பலரும் சுஷ்மாவுக்கு ஆதரவு அளித்து வரும் நிலையில் வசுந்தரா ராஜேவுக்கு ஆதரவாக எவரும் கருத்து தெரிவிக்கவில்லை.

இத்தகைய நிலையில், இன்று பஞ்சாபில் நடைபெறவிருந்த நிகழ்ச்சியில் ராஜ்நாத் சிங், அமித் ஷாவுடன் இணைந்து வசுந்தராவும் கலந்து கொள்வதாக இருந்தது. ஆனால், தனக்கு உடல்நிலை சரியில்லை எனக் காரணம் காட்டி நிகழ்ச்சிக்கு செல்வதை புறக்கணித்துள்ளார் வசுந்தரா.

முன்னதாக நேற்று மாலை வசுந்தரா ராஜே பாஜக தேசிய தலைவர் அமித் ஷாவுடன் தொலைபேசியில் பேசினார் என்பது குறிப்பிடத்தகக்து.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in