Published : 28 Jun 2015 10:05 AM
Last Updated : 28 Jun 2015 10:05 AM

ஆந்திராவில் செம்மரம் கடத்தியதாக 7 வனத்துறை அதிகாரிகள் கைது: திருப்பதியில் மீண்டும் துப்பாக்கிச் சூடு

ஆந்திர மாநிலம் கடப்பாவில் செம்மர கடத்தலில் ஈடுபட்ட 7 வனத்துறை அதிகாரிகளை போலீ ஸார் கைது செய்துள்ளனர். மேலும் திருப்பதி சேஷாசலம் வனப்பகுதியில் நேற்று செம்மர கடத்தல் கும்பலுக்கும், போலீஸாருக்கும் இடையே நடந்த மோதலில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. இதில் ஒருவர் கைது செய்யப்பட்டார்.

கடப்பா மாவட்டத்தில் போலீஸார் மற்றும் திருப்பதி செம்மர தடுப்பு பிரிவினர் கூட்டாக நடத்திய அதிரடி சோதனையில் வனத்துறை அதிகாரிகள் 7 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களிடமிருந்து 14 செம்மரங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதன் மதிப்பு ரூ. 9.28 லட்சமாகும்.

சில நாட்களுக்கு முன்பு செம்மரம் கடத்தி, தற்போது கைது செய்யப்பட்டுள்ள நபரிடம் இருந்து பறிமுதலான செம்மரங்களை கடத்த முயன்றபோது இந்த வனத்துறை அதிகாரிகளை போலீஸார் கைது செய்தனர்.

இது குறித்து செம்மர கடத்தல் தடுப்பு பிரிவு இன்ஸ்பெக்டர் ஊசலைய்யா கூறியது: பறிமுதல் செய்யப்பட்ட செம்மரங்களை கடத்தி மீண்டும் கடத்தல் கும்பலுக்கே விற்று வருவது விசாரணையில் தெரிய வந்துள்ளது. இதற்காக மாதம் ரூ. 10 ஆயிரம் லஞ்சமாக பெற்றுள்ளனர்.

தற்போது கைது செய்யப்பட்டுள்ளவர்களை தவிர மேலும் பல வனத்துறையினர் ஈடுபட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. இது குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்று கூறினார்.

இதே போன்று கடப்பாவில் உள்ள வெங்கடாபுரம் பகுதியில் செம்மரம் கடத்தியதாக ராஜேஸ்வரி என்பவரை போலீஸார் கைது செய்துள்ளனர். இவரிடம் இருந்து ரூ. 17. 2 லட்சம் மதிப்புள்ள செம்மரங்கள், செல்போன், வேன் போன்றவற்றை போலீஸார் கைது செய்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x