

புதிதாக பொறுப்பேற்கும் அரசிடம் அமைச்சரவை குறித்த அனைத்து விவகாரங்களையும் இலாகா வாரியாக அளிக்க அறிக்கை ஒன்றை தயார் செய்யுமாறு மத்திய அமைச்சரவைக்கு உத்தரவிடப்பட்டது.
மத்தியில் புதிதாக அமைய இருக்கும் அரசு விரைவில் பதவியேற்க உள்ள நிலையில், தற்போதைய அமைச்சரவையில் நிர்வாக சீர்திருத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அனைத்து அமைச்சகங்களும் தங்கள் திட்டங்களில் இதுவரை அடைந்த வெற்றிகள் மற்றும் மாற்றங்கள் உள்ளிட்ட தகவல்கள் அடங்கிய அறிக்கையை தயாராக வைத்திருக்குமாறு மத்திய அமைச்சரவை செயலகம் உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அந்தந்த அமைச்சகங்களின் செயலாளர்கள் பிரதமராக பொறுப்பேற்க உள்ள நரேந்திர மோடியிடம் இந்த அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டியிருக்கும் என்றும் அமைச்சரவை செயலகம் கூறியுள்ளது.
இதற்கிடையில் மத்திய தொழில் கொள்கை மற்றும் மேம்பாட்டுத் துறை, நாட்டின் வளர்ச்சிக்கான 30 யுக்திகள் அடங்கிய பட்டியலை நரேந்திர மோடியிடம் சமர்ப்பிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.