

மும்பையில் கடந்த 5 நாட்களாக பெய்த மழையால் அந்த நகரம் தண்ணீரில் மூழ்கியுள்ளது. சுமார் 2 கோடி மக்கள் அன்றாட அலுவல்களை தொடர முடியாமல் பரிதவித்து வருகின்றனர்.
மும்பையில் கடந்த வெள்ளிக் கிழமை கனமழை பெய்தது. அன் றைய தினம் ஒட்டுமொத்த பருவ மழையில் 10 சதவீதம் ஒரே நாளில் கொட்டித் தீர்த்தது. அன்றுமுதல் மும்பையில் இடைவிடாது மழை பெய்து வருகிறது. அங்கு நேற்று ஐந்தாவது நாளாக கனமழை பெய்தது.
இதனால் புறநகர் ரயில் சேவை கள் 30 நிமிடங்கள் தாமதமாக இயக்கப்பட்டன. தாதர் பகுதியில் மின் வயர்கள் துண்டிக்கப்பட்டதால் அப்பகுதியில் ரயில் சேவை சிறிது நேரம் நிறுத்தப்பட்டது. சில எக்ஸ்பிரஸ் ரயில்கள் மாற்றுப் பாதையில் இயக்கப்பட்டன.
செம்பூர், திலக்நகர், குர்லா, வாஷி, சைன் உள்ளிட்ட பகுதி களின் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் சாலை போக்குவரத்து ஸ்தம்பித்துள்ளது. சில இடங்களில் வாகனங்கள் வரிசை கட்டி நிற்பதால் ஒரு மைல் தூரத்தை கடக்க பல மணி நேரமானது.
விமானங்கள் தாமதம்
சத்ரபதி சிவாஜி சர்வதேச விமான நிலையத்தில் விமானங்கள் சுமார் 45 நிமிடங்கள் வரை தாமதமாக இயக்கப்பட்டன. 4 விமானங்கள் மாற்றுப் பாதையில் திருப்பி விடப்பட்டன. தாதர் கிழக்குப் பகுதியில் மரம் முறிந்து விழுந்த தில் ஒருவர் உயிரிழந்தார். ஒரு பெண் காயமடைந்தார்.
மும்பை வானிலை மையம் நேற்று வெளியிட்ட அறிக்கையில் அடுத்த 24 மணி நேரத்துக்கு கன மழை பெய்யும் என்று எச்சரிக் கப்பட்டுள்ளது. இதனால் பொது மக்கள் அச்சமடைந்துள்ளனர்.
கடந்த ஐந்து நாட்களாக மழை யால் மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது. மும்பையில் வசிக்கும் சுமார் 2 கோடிக்கும் அதிகமான மக்கள் வீட்டை விட்டு வெளியே செல்ல முடியாமல் பரிதவித்து வருகின்றனர்.