

வடகிழக்கு மாநிலங்களில் வேலைவாய்ப்பு, இளைஞர் நலன் மற்றும் பொருளாதார வளர்ச்சி போன்றவற்றில் கவனம் செலுத்துவதே முக்கிய நோக்கம் என்று மத்திய இணையமைச்சர் வி.கே.சிங் தெரிவித்தார்.
வடகிழக்கு பகுதிகள் மேம்பாடு துறையின் இணை அமைச்சர் (தனிப்பொறுப்பு) பதவி வகிக்கும் அவர் இன்று தனது பொறுப்பை ஏற்றுக் கொண்டார். வெளியுறவு, வெளிநாடு வாழ் இந்தியர் விவகாரத்துக்கும் வி.கே.சிங் இணையமைச்சராக இருக்கிறார்.
தனது முதல் கட்ட நடவடிக்கைகள் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய வி.கே.சிங், "மிகவும் பின் தங்கிய நிலையில் உள்ள வடகிழக்கு மாநிலங்களில் வேலைவாய்ப்பு, இளைஞர் நலன், பொருளாதார வளர்ச்சி போன்றவற்றில் கவனம் செல்வதே முக்கிய நோக்கம்.
இந்தப் பகுதிகள் அதிக அளவிலான பணிகள் மேற்கொள்ளப்பட வேண்டியுள்ளது. மேற்கு தொடர் எல்லை பகுதியில் அமைதி நிலவ வழிவகுப்பது முக்கிய பணியாக உள்ளது" என்றார் அவர்.