

பாஜக கூட்டணி அரசில் இடம்பெறப் போகும் அமைச்சர்கள் யார் யார் என்பதை இறுதி செய்வது பற்றி பிரதமராக பொறுப்பேற்கும் நரேந் திர மோடி, ராஜ்நாத் சிங் உள் ளிட்ட பாஜக தலைவர்கள், ஆர்எஸ்எஸ் தலைவர்கள் தமக் குள் ஞாயிற்றுக்கிழமை முக்கிய ஆலோசனை நடத்தினர்.
இந்த ஆலோசனை விவகாரத் தில் ரகசியம் காக்கப்படுவதால் யார் யாருக்கெல்லாம் உள்துறை, நிதித் துறை உள்ளிட்ட முக்கிய அமைச் சர் பதவி கிடைக்கும் என்பதில் ஊகங்கள் வெளியாகி உள்ளன.
நரேந்திர மோடி, பிரதமர் பதவி ஏற்கும்போது அவருடன் பதவியேற்க உள்ள அமைச்சர்கள் பட்டியல் திங்கள்கிழமை காலை குடியரசுத் தலைவர் மாளிகைக்கு அனுப்பிவைக்கப்படும் என எதிர் பார்க்கப்படுகிறது.
பாஜக தலைவர் அருண் ஜேட்லி, ஆர்எஸ்எஸ் அமைப்பின் மூத்த நிர்வாகி சுரேஷ் சோனியை டெல்லியில் உள்ள அவரது அலுவலகத்தில் சந்தித்து விவாதித்தார்.
தீவிர ஆலோசனைகளுக்கு மத்தியில் காஜியாபாத் தொகுதி எம்பியும் முன்னாள் ராணுவ தள பதியுமான ஜெனரல் வி.கே.சிங், ராஜீவ் பிரதாப் ரூடி, அனந்த குமார், ஜெக்தீஷ் முக்தி, ஷியோ கர் தொகுதி எம்பி ரமா தேவி ஆகியோர் ராஜ்நாத் சிங்கை சந்தித்தனர்.