

மும்பையில் விஷச்சாராயம் குடித்து பலியானோர் குடும்பத்துக்கு தலா ரூ.1 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என மகாராஷ்டிர மாநில அரசு அறிவித்துள்ளது.
மும்பையில் விஷச்சாராய துயரத்துக்கு பலியானோர் எண்ணிக்கை 97 ஆக அதிகரித்துள்ளது. 40 பேர் இன்னமும் மருத்துவமனையில் கவலைக்கிடமாக உள்ளனர்.
இது தொடர்பாக அதிகாரிகள் பணி நீக்கம் செய்யபப்பட்டுள்ளனர். பணியில் கவனமின்மை குற்றச்சாட்டில் இன்ஸ்பெக்டர், சப்-இன்ஸ்பெக்டர், மற்றும் 2 கான்ஸ்டபிள்கள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இதுவரை 6 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர், கடமை தவறியதற்காக 8 போலீஸார் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், பலியானோர் குடும்பத்துக்கு தலா ரூ.1 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என மகாராஷ்டிர மாநில அரசு அறிவித்துள்ளது. பாதிக்கப்பட்ட குடும்பங்களை இன்று நேரில் சந்தித்த மாநில கல்வி அமைச்சர் இதற்கான அறிவிப்பை வெளியிட்டார்.