ஜார்க்கண்ட் மாநிலத்தில் பட்டப்பகலில் பயங்கரம்: நீதிமன்றத்தில் 3 கைதிகள் சுட்டுக் கொலை - ஏ.கே.47 துப்பாக்கிகளுடன் நுழைந்த மர்ம நபர்களை தேடும் பணி தீவிரம்

ஜார்க்கண்ட் மாநிலத்தில் பட்டப்பகலில் பயங்கரம்: நீதிமன்றத்தில் 3 கைதிகள் சுட்டுக் கொலை - ஏ.கே.47 துப்பாக்கிகளுடன் நுழைந்த மர்ம நபர்களை தேடும் பணி தீவிரம்
Updated on
1 min read

ஜார்க்கண்ட் மாநிலம் ஹசாரிபாக் நீதிமன்றத்தில் ஏ.கே. 47 துப்பாக்கி களுடன் நுழைந்த மர்ம நபர்கள் சரமாரியாக சுட்டதில் மூன்று விசாரணை கைதிகள் உயிரிழந் தனர். ஒரு போலீஸ்காரர், வழக்கறிஞர் ஆகியோர் காய மடைந்தனர்.

ஜார்க்கண்ட் மாநிலத்தில் நிலக்கரி சுரங்கங்கள் அதிகம் உள்ளன. இந்த சுரங்கங்களை மையமாக வைத்து நிழல் உலக தாதாக்கள் பலர் செயல்படு கின்றனர். இதில் ராஞ்சி, ராம்கர், ஹசாரிபாக் பகுதிகளைச் சேர்ந்த நிலக்கரி சுரங்க உரிமையாளர்களிடம் பணம் வசூலிப்பதில் சுஷில் ஸ்ரீவஸ்தவா என்பவருக்கும் போலோ பாண்டே என்பவருக்கும் இடையே சுமார் 20 ஆண்டுகளுக்கும் மேலாக பகை நீடித்து வருகிறது. இரு தரப்பினரும் துப்பாக்கி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் அடிக்கடி மோதிக் கொள்வது வாடிக்கை.

சுஷில் ஸ்ரீவஸ்தவா ஒரு வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்தார். ஆனால் சிறையில் இருந்தபடியே அவர் தனது கூட்டாளிகள் மூலம் திரைமறைவு வேலைகளில் ஈடுபட்டு வந்ததாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில் சுஷி்ல் ஸ்ரீவஸ்தவா மற்றும் அவரது கூட்டா ளிகள் இருவரை ஹசாரிபாக் நீதி மன்றத்தில் ஆஜர்படுத்த போலீஸார் நேற்று காலை அழைத்து வந்தனர்.

மர்ம நபர்கள் திடீர் தாக்குதல்

அப்போது மோட்டார் சைக் கிளில் வந்த மர்ம நபர்கள் சிலர் ஏகே 47 துப்பாக்கியால் சுஷிலை குறிவைத்து சுட்டனர். ரத்த வெள்ளத் தில் சரிந்த அவர் சம்பவ இடத்தி லேயே உயிரிழந்தார். அடுத்த சில நொடிகளில் அவருடைய கூட்டாளிகள் இருவரையும் அந்த மர்ம நபர்கள் சுட்டுக் கொன்றனர்.

இந்தத் தாக்குதலில் போலீஸ் காரர் ஒருவரும் வழக்கறிஞர் ஒருவரும் காயமடைந்தனர். இருவரும் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். நீதிமன்ற வளாகத்தில் மர்ம நபர்கள் சுமார் 30 ரவுண்டுகள் துப்பாக்கியால் சுட்டனர். இதனால் பொதுமக்கள் உயிர் பயத்தில் நாலாபுறமும் சிதறி ஓடினர்.

அங்கு பாதுகாப்புக்கு நின்றி ருந்த போலீஸ்காரர்கள், மர்ம நபர்களை பிடிக்க அவர்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். இதில் ஏ.கே. 47 துப்பாக்கி வைத்திருந்த ஒருவரின் காலில் குண்டுபாய்ந்தது. அந்த நபர் ஏ.கே. 47 துப்பாக்கியை கீழே தவறவிட்டார். எனினும் கூட்டநெரி சலைப் பயன்படுத்தி மர்ம நபர்கள் அங்கிருந்து தப்பி சென்றுவிட்டனர்.

போலீஸ் தரப்பு விளக்கம்

இந்தச் சம்பவம் குறித்து போலீஸ் வட்டாரங்கள் கூறியதாவது: சுஷில் வஸ்தவா குழுவுக்கும் போலோ பாண்டே குழுவுக்கும் இடையே நீண்டகாலமாக சண்டை நடைபெற்று வருகிறது. அண்மைக்காலமாக சுஷிலின் கை ஓங்கிவந்தது. எதிர்பாராத திருப்பமாக போலோ பாண்டேவின் ஆட்கள் நீதிமன்ற வளாகத்திலேயே சுஷிலை தீர்த்துக் கட்டியுள்ளனர் என்று தெரிவித்தனர்.

பட்டப் பகலில் நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்ற இந்தத் தாக்குதல் குறித்து போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in