அரசு அலுவலர் எண்ணிக்கையை குறைக்க டெல்லி முதல்வர் கேஜ்ரிவால் திட்டம்

அரசு அலுவலர் எண்ணிக்கையை குறைக்க டெல்லி முதல்வர் கேஜ்ரிவால் திட்டம்
Updated on
1 min read

சிக்கன நடவடிக்கையின் ஒரு பகுதியாக டெல்லி அரசின் அலுவலர்கள் எண்ணிக்கையைக் குறைக்க முதல்வர் கேஜ்ரிவால் திட்டமிட்டுள்ளார். ஏற்கெனவே அரசு அதிகாரிகள் நியமனத்தில் மத்திய அரசுக்கும், டெல்லி அரசுக் கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ள நிலையில், இந்த திட்டத்தால் புதிய சர்ச்சை கிளம்பும் என எதிர்பார்க்கப் படுகிறது.

இதுகுறித்து டெல்லி மாநில உயர் அதிகாரிகள் வட்டாரம் ‘தி இந்து’ விடம் கூறும்போது, “டெல்லி மாநில அரசின் பல்வேறு துறைகளில் தேவைக்கு அதிகமாக அலுவலர் கள் இருப்பதாகவும், இவர்களுக் காக அரசு செய்யும் செலவு வீணா வதாகவும் முதல்வர் கருதுகிறார். எனவே, அலுவலர்கள் எண்ணிக் கையை குறைக்கும் பொருட்டு அவர்கள் ஒவ்வொருவருக்கும் ஒதுக்கப்பட்டுள்ள பணி மற்றும் அதை முடிக்க செலவாகும் நேரம் ஆகியவை குறித்து ஆய்வு நடத்த உத்தரவிட்டுள்ளார். இதனால் அவருக்கு புதிதாக தலைவலி வருமே தவிர எந்தப் பலனும் ஏற்படப்போவதில்லை” என்றனர்.

கடந்த நான்கு மாதங்களாக டெல்லி அரசின் நிர்வாக சீர்திருத்தத் துறையின் சார்பில் நடத்தப்பட்ட இந்த ஆய்வு தொடர்பான அறிக்கை கேஜ்ரிவாலிடம் சமர்ப்பிக்கப்பட் டுள்ளது. இதில் டெல்லியின் குடிநீர் வாரியம், தொழில் துறை, பொதுப்பணித் துறை, பொது விநியோகம், மற்றும் அரசு ஊழியர் வருங்கால வைப்பு நிதி ஆகிய வைகளில் தேவைக்கும் அதிக அளவில் ஊழியர்கள் இருப்பதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த அறிக் கையை ஆதாரமாகக் கொண்டு, பல துறைகளில் அலுவலர்களின் எண்ணிக்கையைக் குறைப்பதுடன், தனது பணிகளை குறிப்பிட்ட நாட் களுக்குள் முடிக்காத அலுவலர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் கேஜ்ரிவால் திட்டமிட்டுள்ளார்.

ஏற்கெனவே, டெல்லி அரசு உயர் அதிகாரிகள் நியமனம் மற்றும் பணியிட மாற்றம் செய்யும் விவ காரத்தில் முதல்வர் கேஜ்ரிவாலுக் கும் துணைநிலை ஆளுநர் நஜீப் ஜங்குக்கும் இடையே கடும் மோதல் நிலவி வருகிறது. இந்த நிலையில் அலுவலர்கள் எண்ணிக்கையைக் குறைத்தால் மேலும் புதிய சர்ச்சை ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சேவை அதிகரிக்க உத்தரவு

மேலும் பொதுமக்களுக்கான சேவையை தாமதமின்றி வழங்கவும் கேஜ்ரிவால் நடவடிக்கை எடுத் துள்ளார். இதில் பொதுமக்களின் மனுக்கள் மீது செய்யப்படும் பரிந் துரைகளுக்கான வழிமுறைகளை யும் குறைக்க அரசு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். குறிப்பாக கோப்புகளை அவசியம் இல்லாமல் தனது பார்வைக்கு கொண்டுவரத் தேவையில்லை என்றும் அதன் மீது சம்பந்தப்பட்ட அமைச்சர்களோ அதிகாரிகளோ இறுதி முடிவு எடுக்கலாம் என்றும் முதல்வர் கூறியுள்ளார்.

சில கோப்புகள் சம்பந்தமில்லாத அதிகாரிகளின் பார்வைக்கு வைக்கப்படுவதாக டெல்லி அரசின் நிர்வாக சீர்திருத்தத் துறை அளித்த பரிந்துரையில் கூறப்பட்டிருந்தது. இதன் பேரிலேயே இந்த முடிவு எடுக்கப்பட்டதாகக் கருதப் படுகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in