

மக்களவைத் தேர்தலில் பாஜக மகத்தான வெற்றி பெற்றதற்காக பாராட்டி கட்சித் தலைவர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதி இருக்கிறார் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி.
இந்த தகவலை அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி வட்டாரங்கள் வியாழக்கிழமை தெரிவித்தன. தேர்தலில் நரேந்திர மோடி வரலாற்று சிறப்புமிக்க வெற்றி பெற்ற போதிலும் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியோ அல்லது அவரது மகன் ராகுல் காந்தியோ அவருக்கு பாராட்டு தெரிவிக்கவில்லை என பாஜக தலைவர்கள் விமர்சித்து வந்தனர்.
வரும் 26ம் தேதி பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. தேர்தலுக்கு முன் நாடு முழுவதும் நரேந்திர மோடி இடைவிடாமல் பிரசாரம் செய்தார். அந்த கட்சிக்கு தேர்தலில் தனித்தே 282 இடங்கள் கிடைத்தன.