

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூல் விருந்தினர் மாளிகை தாக்குதலில் பலியானவர்கள் குடும்பத்தாருக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.
காபூல் விருந்தினர் மாளிகை தாக்குதல் குறித்து பிரதமர் நரேந்திர மோடி, ஆப்கான் அதிபர் அஷரஃப் கனியை தொடர்பு கொண்டு பேசினார்.
அப்போது, ஆப்கானில் விருந்தினர் மாளிகையில் பயங்கரவாதிகள் கண்மூடித்தனமாக நடத்திய தாக்குதலில் 4 இந்தியர்கள் மற்றும் ஒர் அமெரிக்கர் உள்பட 14 பேர் பலியானதற்கு தனது இரங்கலை தெரிவித்தார்.
4 இந்தியர்கள் பலியானதற்கு, மோடியிடம் ஆப்கன் அதிபரும் வருத்தம் தெரிவித்தார். தீவிரவாதத்தை ஒன்றிணைந்து எதிர்கொள்வோம் என மோடி தெரிவித்தார்.