

அங்கன்வாடி ஊழியர்களின் ஓய்வு வயது உச்ச வரம்பை 60 ஆக உயர்த்தி ஆந்திர மாநில அரசு நேற்று அரசாணை பிறப்பித்தது.
ஆந்திர மாநிலத்தில் தெலுங்கு தேசம் கட்சி ஆட்சிக்கு வந்த பின்னர், அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயது உச்சவரம்பு 60 ஆக உயர்த்தப்பட்டது. இதற்கு முன்பு ஓய்வு வயது 58 ஆக இருந்தது. இந்நிலையில், அங்கன்வாடி ஆசிரியர்கள், ஊழியர்கள், உதவியாளர்களின் ஓய்வுபெறும் வயது உச்ச வரம்பையும் 60 ஆக உயர்த்தி ஆந்திர அரசு நேற்று புதிய அரசாணை பிறப்பித்தது.
மேலும் 60 வயது நிரம்பிய ஆசிரி யர்கள், ஊழியர்களுக்கு ரூ.50 ஆயிர மும் உதவியாளர்களுக்கு ரூ.20 ஆயிரமும் வழங்கி ஓய்வு வழங்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.