Last Updated : 10 May, 2015 11:52 AM

 

Published : 10 May 2015 11:52 AM
Last Updated : 10 May 2015 11:52 AM

நிதி அமைச்சகத்தில் ரூ.6.4 கோடி லஞ்சம்: முன்னாள் கூடுதல் செயலர், குடும்பத்தினர் மீது சிபிஐ வழக்கு

ரூ.6.4 கோடி லஞ்சம் வாங்கியதாக நிதியமைச்சகத்தின் முன்னாள் கூடுதல் செயலர் ஜே.எஸ். மைனி மற்றும் அவரது குடும்பத்தினர் மீது சிபிஐ வழக்குப் பதிவு செய்துள்ளது.

2007-ம் ஆண்டில் இந்தியாவின் உரத் தயாரிப்பு நிறுவனமான கிரிசாக் பாரதி கூட்டுறவு நிறுவனம் (கிரிப்கோ), நார்வேயின் பெரிய உர நிறுவனமான யாரா இடையே மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தை அனுமதிக்க ரூ.6.4 கோடி லஞ்சம் வாங்கப்பட்டது என்பது குற்றச் சாட்டு. மைனி மற்றும் அவரது இரு மகன்களும், நார்வே உர நிறுவனத்திடம் இருந்து ரூ.6.4 கோடி லஞ்சம் பெற்றுள்ளனர்.

மைனி தவிர அவரது இரு மகன்கள், அவர்களது மனைவியர், யாரா மற்றும் கிரிப்கோ நிறுவன அதிகாரிகள் மீதும் சிபிஐ வழக்குப் பதிவு செய்துள்ளது.

இது தொடர்பாக சிபிஐ செய்தித் தொடர்பாளர் காஞ்சன் பிரசாத் நேற்று செய்தியாளர்களிடம் பேசுகையில், “டெல்லி மற்றும் சத்தீஸ்கரில் மைனிக்கு சொந்த மான இடங்களில் சோதனை நடத்தப்பட்டு முக்கிய ஆவணங் கள் பறிமுதல் செய்யப்பட் டுள்ளன. வெளிநாட்டில் இருந்து கோடிக்கணக்கான பணம் மைனி மற்றும் அவரது குடும்பத் தினரின் கணக்கில் வரவு வைக்கப் பட்டுள்ளது இந்த வழக்கின் முக்கிய ஆதாரமாக உள்ளது.

இந்தியாவில் வெற்றிகரமாக நடைபெறாத ஒரு வணிகத்துக்கு யாரா நிறுவனம் பெருமளவில் பணத்தை ‘இந்திய ஆலோச கருக்கு’ வழங்கியதற்காக நார்வே பொருளாதார குற்ற விசாரணை அமைப்பு அபராதம் விதித்தது. அதனை ஏற்றுக் கொண்டு அந்த நிறுவனம் அபராதம் செலுத்தியது.

இதையடுத்து இந்தியாவில் அப்பணத்தை லஞ்சமாக பெற்றது யார் என்ற கேள்வி எழுந்தது. இதையடுத்து சிபிஐயின் பிடியில் மைனி சிக்கியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x