பினாமி சொத்துக்களுக்கு எதிரான மசோதா விரைவில்

பினாமி சொத்துக்களுக்கு எதிரான மசோதா விரைவில்
Updated on
1 min read

உள்நாட்டு கருப்புப் பண விவகாரத்தை ஒழிக்கும் விதமாக புதிய பினாமி மசோதா ஒன்றை மத்திய அரசு விரைவில் தாக்கல் செய்யலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இது குறித்து அருண் ஜேட்லி கூறும்போது, “பினாமி சட்ட மசோதாவைப் பொறுத்தவரையில், இது மிகவும் முன்னேறிய நிலையில் உள்ளது என்று நினைக்கிறேன். மிகவும் நவீனமான பினாமி மசோதா வரையப்பட்டுள்ளது. அது அமைச்சரவையை எப்போது வேண்டுமானாலும் வந்தடையும்.

உள்நாட்டு கருப்புப் பண பெருக்கத்தை ஒழிப்பது மிக முக்கியம். நமது பொருளாதாரத்தை மெதுவே வெளிப்படையான பொருளாதாரமாக கொண்டு வர வேண்டும். இதன் மூலம் வரிவிதிப்பை குறைக்க முடியும். ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி அதிகரிக்கும்.

இணை பொருளாதாரமாக செயல்பட்டு வரும் கருப்புப் பணத்தை மைய பொருளாதார நீரோட்டத்துக்குள் கொண்டு வந்தால், வரிவிதிப்பை நிச்சயம் குறைக்க முடியும்” என்றார்.

இது குறித்து மத்திய இணை அமைச்சர் ஜெயந்த் சின்ஹா கடந்த மாதம் கூறிய போது, பினாமி சொத்துக்களின் அடிப்படையில் கருப்புப் பணம் பதுக்கப்படுவது தடுக்கப்படும் என்று கூறியது குறிப்ப்பிடத்தக்கது.

பினாமி நடவடிக்கைகளை தடுக்க புதிய சட்டம் கொண்டு வரப்படும் என்று நிதியமைச்சர் அருண் ஜேட்லி பட்ஜெட் தாக்கலின் போது கூறியிருந்ததும் குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in