

பிரதமர் நரேந்திர மோடி அடுத்த வாரம் சீனாவுக்குச் சுற்றுப் பயணம் மேற்கொள்ளவிருக்கிறார். அதனையொட்டி அவர் `டைம்' இதழுக்கு அளித்துள்ள பேட்டியில் கூறப்பட்டுள்ளதாவது:
இந்திய சீன எல்லையில் பெருமளவு அமைதி நிலவுகிறது. அந்த எல்லை பிரச்சினைக்குரிய எல்லை அல்ல. கடந்த கால் நூற் றாண்டாக எந்த ஒரு பக்கத்தில் இருந்தும் ஒரு தோட்டா கூட செலுத்தப்படவில்லை.
இதன் மூலம் தெரிய வருவது, இரு நாடுகளும் வரலாற்றில் இருந்து பாடம் கற்றுக் கொண்டுள்ளன என்பதுதான். அவ்வப்போது எல்லை குறித்து சில பிரச்சினைகள் எழுந்தாலும் அதனைக் கையாள இரு நாடுகளும் முதிர்ச்சி பெற்றுள்ளன. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.