வெயிலுக்கு ஆந்திரா, தெலங்கானாவில் 1,056 பேர் பலி

வெயிலுக்கு ஆந்திரா, தெலங்கானாவில் 1,056 பேர் பலி
Updated on
1 min read

ஆந்திரம், தெலங்கானா ஆகிய இரு மாநிலங்களில் இந்த ஆண்டு வெயிலுக்கு இதுவரை 1,056 பேர் உயிரிழந்துள்ளனர்.

கடந்த 4-ம் தேதி தொடங்கிய கத்திரி வெயில் இன்றோடு முடிவடைகிறது. நேற்று முன் தினம் மாலை மற்றும் இரவு வேளைகளில் இரு மாநிலங்களிலும் பரவலாக மழை பெய்தது. இதன் காரணமாக நேற்று வெயிலின் தாக்கம் குறைவாக இருந்தது. ஆயினும் இன்னமும் 2 நாட்களுக்கு கோடை வெயிலின் தாக்கம் இருக்கும் என விசாகப்பட்டினம் வானிலை மைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சாதாரணமாக பதிவாகும் வெப்பத்தை விட இந்த இரண்டு நாட்களில் 3 முதல் 7 டிகிரி செல்சியஸ் வரை அதிக வெப்பம் இருக்கும் என எச்சரித்துள்ளனர்.

இதுவரை ஆந்திரம், தெலங் கானா ஆகிய இரு மாநிலங்களில் 1056 பேர் வெயிலின் வெப்பம் தாளாமல் உயிரிழந்துள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in