

மத்தியில் பாரதிய ஜனதா கட்சி தலைமையிலான அரசு ஓராண்டை நிறைவு செய்யும் தருணத்தில், மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் நேற்று ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத்தைச் சந்தித்து உரையாடினார்.
டெல்லியில் இருந்து விமானம் மூலமாக நாக்பூர் வந்த அவர், ஆர்எஸ்எஸ் தலைமையகமான 'ஹெட்கேவார் பவனு'க்குச் சென்றார். அங்கு மோகன் பாகவத்துடன் 2 மணி நேரம் ராஜ்நாத் தனியாக ஆலோசனை நடத்தினார். அப்போது நிலம் கையகப் படுத்துதல் சட்டம் உள்ளிட்ட முக்கியப் பிரச்சினைகள் குறித்து விவாதிக்கப்பட்டதாக ஆர்எஸ்எஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.