

அந்தமான் கடலில் காணாமல் போன கடற்படை கப்பலை கண்டுபிடிக்க வேண்டும் என்று மாநிலங்களவையில் அதிமுக கோரிக்கை விடுத்துள்ளது.
மாநிலங்களவையில் நேற்று பூஜ்ய நேரத்தின்போது அதிமுக உறுப்பினர் சசிகலா புஷ்பா பேசிய தாவது: கடற்படைக்குச் சொந்த மான சிறிய ரக கப்பல் கடந்த டிசம்பர் 15-ம் தேதி அந்தமானில் இருந்து கார் நிக்கோபருக்கு சென்று கொண்டிருந்தது. 8 வீரர்க ளுடன் சென்ற அந்த கப்பல் மோசமான வானிலை காரணமாக மாயமானதாகக் கூறப்படுகிறது.
இதுவரை அந்த கப்பல் குறித்து எவ்வித தடயமும் கிடைக்க வில்லை. அதை கண்டுபிடிக்க கடலோர காவல் படை எவ்வித முயற்சியும் மேற்கொள்ள வில்லை என்று தெரிகிறது. உடனடி யாக அந்த கப்பலை கண்டுபிடிக்க தீவிர தேடுதல் நடவடிக்கைகளை தொடங்க வேண்டும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இதுகுறித்து மாநிலங்களவை துணைத் தலைவர் பி.ஜே.குரியன் கூறியபோது, இது முக்கியமான பிரச்சினை, இதுகுறித்து அரசு பதில் அளிக்க வேண்டும் என்று நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சர் முக்தர் அப்பாஸ் நக்வியிடம் கேட்டுக் கொண்டார்.