

திருப்பதி கோவிந்தராஜ பெருமாள் கோயில் பிராமோற்சவ விழா கடந்த 25-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இவ்விழாவில் தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். இந்நிலையில் 6-ம் நாளான நேற்று காலை, உற்சவரான கோவிந்தராஜ பெருமாள், ஹனுமன் வாகனத்தில் பவனி வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். திருமாட வீதிகளில் பவனி வந்த கோவிந்தராஜ சுவாமியை ஏராளமானோர் வழிபட்டனர்.
திருப்பதியை அடுத்துள்ள அப்பலைய்ய குண்டா பகுதி யில் புகழ்பெற்ற பிரசன்ன வெங்கடேஸ்வரர் கோயில் உள்ளது. இக்கோயிலை திருமலை-திருப்பதி தேவஸ்தானத்தினர் பராமரித்து வருகின்றனர். ஆண்டுதோறும் இக்கோயிலில் பிரம்மோற்சவ விழா வெகு விமரிசையாக நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டு இக்கோயி லின் பிரம்மோற்சவ விழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.
கோயிலில் கொடிமரத்தில் கருட சின்னம் பொறித்த பிரம்மோற்சவ கொடியை வேத பண்டிதர்கள் முன்னிலையில் ஏற்றி வழிபட்டனர். மேளதாளங்களுடன் வேதங்கள் முழங்க பிரம்மோற்சவ கொடி ஏற்றப்பட்டது. இந்நிகழ்ச்சியில் தேவஸ்தான அதிகாரிகள் மற்றும் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.