

அரவிந்த் கேஜ்ரிவால் சிறையில் அடைக்கப்பட்டது குறித்து டெல்லி மக்களிடம் வீடு வீடாகச் சென்று பிரச்சாரம் மேற்கொள்ள ஆம் ஆத்மி கட்சி முடிவெடுத்துள்ளது.
ஆம் ஆத்மி அரவிந்த் கேஜ்ரிவால் சிறையில் அடைக்கப்பட்டது குறித்து டெல்லி மக்களிடம் வீடு வீடாக சென்று பிரச்சாரம் மேற்கொள்ள அக்கட்சியினர் முடிவெடுத்துள்ளனர்.
பாஜக முன்னாள் தலைவர் நிதின் கட்கரி தொடர்ந்த அவதூறு வழக்கில், ஜாமீன் பெற பிரமாண பத்திரம் அளிக்க மறுத்த டெல்லி முன்னாள் முதல்வரும், ஆம் ஆத்மி கட்சித் தலைவருமான அர்விந்த் கேஜ்ரிவால் இரண்டு நாள்கள் நீதிமன்றக் காவலில் திஹார் சிறையில் அடைக்கப்பட்டார்.
அரவிந்த் கேஜ்ரிவாலில் ஆதரவாளார்கள் திஹார் சிறையை முற்றுகையிட்டு நேற்று இரவு ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதனைத் தொடர்ந்து டெல்லியில் திஹார் சிறை இருக்கும் பகுதியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
இந்நிலையில், டெல்லியில் இன்று யோகேந்திர யாதவ், மனிஷ் சிசோடியா, ராக்கி பிர்லா உள்ளிட்ட தலைவர்கள் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
அதில், இனி ஆம் ஆத்மி கட்சியினர் எந்தவிதமான போராட்டத்திலும் ஈடுப்பட வேண்டாம் என்று முடிவெடுக்கப்பட்டது. அதற்கு பதிலாக டெல்லியில் உள்ள ஒவ்வொரு வீட்டிற்கும் சென்று கேஜ்ரிவாலின் நேர்மைக்கு பரிசாக அவரை சிறையில் அடைத்துள்ளது குறித்து மக்களிடம் பிரச்சாரம் மேற்கொள்ள வேண்டும் என்று முடிவெடுக்கப்பட்டது.