ஆக்ராவில் இந்து மதத்துக்கு மாறிய முஸ்லிம்கள் மீண்டும் மறு மதமாற்றம் செய்தது கொண்டனர்

ஆக்ராவில் இந்து மதத்துக்கு மாறிய முஸ்லிம்கள் மீண்டும் மறு மதமாற்றம் செய்தது கொண்டனர்
Updated on
1 min read

ஆக்ராவில் கடந்த டிசம்பர் மாதம் இந்து மதத்துக்கு மாறிய முஸ்லிம்கள் மீண்டும் தங்களது மதத்துக்கு மறு மதமாற்றம் செய்து கொண்டனர்.

ஆக்ராவில் கடந்த கிறிஸ்தமஸ் தினத்தன்று மாபெரும் மத மாற்ற நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இதில் நூற்றுக்கணக்கானோர் மத மாற்றம் செய்துகொண்டனர். இதில் மஹூர் லத்தியா கிராமத்தைச் சேர்ந்த 'நத்' வகுப்பைச் சேர்ந்த முஸ்லிம்களும் அடங்குவர். இந்து மதத்துக்கு மாறினால் நிலம் வழங்கப்படும் என்று இந்துதுவ அமைப்பின் தலைவர் வாக்குறுதி அளித்ததன் பேரில் இவர்கள் அந்த நிகழ்ச்சி நடந்தபோது இந்து மத்துக்கு மாறினர்.

இந்த நிலையில் தற்போது சுமார் 17 முஸ்லிம்கள் இந்து மதத்திலிருந்து மீண்டும் மறு மதமாற்றம் செய்து கொண்டுள்ளனர். மறு மதமாற்றம் செய்துகொண்ட முதியவர் ராமாத் கூறும்போது, "அலி முகமது என்றவர் எங்களது குடும்பத்தினரை மதமாற்றம் செய்துகொள்ளும் படி கூறினார்.

நிலம் தருவதாக இந்துதுவா தலைவர்கள் கூறினர். ஆனால் அவ்வாறு வழங்கப்படவில்லை. எங்களது சமூகத்தை சேர்ந்தவர்களும் எங்களை ஒதுக்கி தள்ளினர்.

திருமணம் உள்ளிட்ட எந்த நிகழ்ச்சிகளுக்கு எங்களை உறவினர்கள் அழைப்பதில்லை. அதனால் திரும்பவும் எங்களது மதத்துக்கு மாறி விட்டோம்" என்றார்.

உத்தரப் பிரதேச மாநிலம் ஆக்ராவில் கடந்த கிறிஸ்தமஸ் தினத்தன்று 100 இஸ்லாமியர்கள் கட்டாய மதமாற்றம் செய்யப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.

மத மாற்றம் செய்துகொண்டால் ஆதார் அட்டை, பணம், நிலம் ஆகியவை வழங்கப்படும் என்று நிகழ்ச்சியை நடத்திய இந்துதுவ அமைப்புகள் அறிவித்ததாக குற்றம்சாட்டப்பட்டது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in