

மத்தியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு பதவியேற்று ஓராண்டு நிறை வடைய உள்ளதையொட்டி, சாதனைகளை மக்களிடம் எடுத்துச் சொல்ல நாடு முழுவதிலும் 200 பேரணிகளை நடத்த பாஜக முடிவு செய்துள்ளது.
இதன் ஒரு பகுதியாக, தீன தயாள் உபாத்யாயாவின் சொந்த கிராமத்தில் பிரதமர் நரேந்திர மோடி நாளை உரையாற்ற உள் ளார். இதுதவிர 5000 பொதுக் கூட்டங்களை நடத்தவும் பாஜக முடிவு செய்துள்ளது.
தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசின் ஓராண்டு நிறைவு தொடர் பான கொண்டாட்டங்களை பாஜக மூத்த தலைவரும் மத்திய அமைச் சருமான அனந்த் குமார் நேற்று அறிவித்தார்.
நாடு முழுவதும் மே 25 முதல் 31 வரை ‘ஜன் கல்யாண் பர்வ்’ என்ற பெயரில் விழா நடைபெறும். மத்திய அமைச்சர்கள், கட்சி எம்பிக் கள், பாஜக முதல்வர்கள், எம்எல் ஏக்கள், கட்சியின் மத்திய, மாநில நிர்வாகிகள் உள்ளிட்டோர் நாட்டின் அனைத்து பகுதிகளுக்கும் சென்று மத்திய அரசின் சாதனைகளை விளக்கிப் பேசுவார்கள்.
உத்தரப்பிரதேசத்தில் தீன தயாள் உபாத்யாயா பிறந்த மதுராவை அடுத்த நக்லா சந்தி ரபான் கிராமத்தில் நாளை நடை பெறும் பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி உரையாற்றுவார்.
200 இடங்களில் நிருபர்களை சந்தித்து, மக்களுக்கான அரசின் நலத் திட்டங்கள் பற்றிய முனைப்பு நடவடிக்கைகள் குறித்து விளக்கப்படும். இதன்படி பாஜக தலைவர் அமித் ஷா 26-ம் தேதி டெல்லியில் நிருபர்களை சந்திப்பார், அவர் அதே தினத்தில் கர்னால் நகரில் நடைபெறும் பொதுக்கூட்டத்திலும் உரையாற்று வார். அடுத்த நாள் சூரத் செல்லும் ஷா, அங்கிருந்து மே 28-ம் தேதி பனாஜி செல்கிறார்.
மேலும் நாட்டின் பல்வேறு இடங்களில் மத்திய அரசின் சாத னைகள் தொடர்பான கண்காட்சி கள், விழாக்கள் நடத்தி, மக்கள் நலனுக்காக செயல்படுத்தப்படும் சமூகப் பாதுகாப்பு திட்டங்கள் பற்றி எடுத்துச்சொல்லப்படும்.
தாலுகா நிலையில் 5,000 மக்கள் சபை கூட்டங்களும் 200 பேரணிகளும் நடத்தப்படும். இதில் மத்திய அமைச்சர்கள், எம்பிக்கள், முதல்வர்கள், மாநில அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், மத்திய, மாநில கட்சி நிர்வாகிகள் பங்கேற்பார்கள். மத்திய அமைச் சர்கள் இந்தப் பணிக்காக 3 நாட்களை ஒதுக்கி உள்ளனர்.
கடந்த ஆண்டு மக்களவைத் தேர்தலின்போது நவீன தொழில்நுட்பத்துடன் பேர ணிகள், பொதுக்கூட்டம் என 5,827 பொதுக்கூட்டங்களில் மோடி பங்கேற்று பிரச்சாரம் செய்தது பெரிய வெற்றியைத் தேடித்தந்தது குறிப்பிடத்தக்கது.