விரைவில் ராமர் கோயில் கட்டும் பணி: வி.எச்.பி. தலைவர் சாத்வி பிராச்சி பேட்டி

விரைவில் ராமர் கோயில் கட்டும் பணி: வி.எச்.பி. தலைவர் சாத்வி பிராச்சி பேட்டி
Updated on
1 min read

அயோத்தியில் சர்ச்சைக்குரிய பகுதியில் ராமர் கோயில் கட்டும் பணி விரைவில் தொடங்கும் என்று விஷ்வ ஹிந்து பரிஷத் (வி.எச்.பி) தலைவர் சாத்வி பிராச்சி கூறினார்.

பாஜக தலித் பிரிவின் தேசிய செயற்குழு கூட்டத்தில் பங்கேற்க நேற்று முன்தினம் ஜலந்தர் வந்த பிராச்சி, நிருபர்களிடம் கூறிய தாவது:

அயோத்தியில் ராமர் கோயில் கட்டும் பணி விரைவில் தொடங்கும். இந்தப் பணி தற்போதைய தேசிய ஜனநாய கூட்டணி ஆட்சிக் காலத் திலேயே முடிக்கப்படும்.

வி.எச்.பி. சார்பில் சாதுக்களின் வழிகாட்டும் கூட்டம் ஹரித்துவாரில் வரும் 25-ம் தேதி முதல் 2 நாட்களுக்கு நடைபெற உள்ளது. அதில் ராமர் கோயில் பற்றி இறுதி முடிவு எடுக்கப்படும். சல்மான் கானுக்கு ஜாமீன் வழங்கப் பட்டதற்கு அவர் ‘கான்’ என்பதே காரணம் என நான் ஏற்கெனவே கூறியது பற்றி கேட்கிறீர்கள். மலேகான் குண்டு வெடிப்பு வழக்கில் சாத்வி பிரக்யாவுக்கு ஜாமீன் மறுக்கப்பட்டுள்ளது. பாலியல் பலாத்காரத்துக்கு ஆளான மும்பை செவிலியர் அருணா வுக்கு 42 ஆண்டுகளாக நீதி கிடைக்காமல் கடைசியில் அவர் இறந்து போனார். இந்நிலையில் சல்மான் கான் மிக எளிதாக ஜாமீன் பெற்றது எப்படி?

பஞ்சாபில் சிரோமணி அகாலி தளம் பாஜக கூட்டணி அரசு, தலித் மக்களுக்கு பாகுபாடு காட்டு கிறது. இதில் சாதாரண மக்கள் மட்டுமல்ல, அமைச்சர்களும் பாதிக் கப்பட்டுள்ளனர்.

போதைப் பொருள் கடத்தல் வழக்கில் அமலாக்கப் பிரிவின் விசாரணையை எதிர் கொண்ட தலித் அமைச்சர் சர்வன் சிங் பில்லார் ராஜினாமா செய்யுமாறு கூறப்பட்டது. ஆனால் இதே வழக்கில் விசாரணையை சந்தித்த விக்ரம் சிங் மஜிதியாவுக்கு நற்சான்று வழங்கப்பட்டுள்ளது.

இவ்வாறு சாத்வி பிராச்சி கூறினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in