Published : 16 May 2015 09:03 AM
Last Updated : 16 May 2015 09:03 AM

நிலம் கையகப்படுத்தும் சட்டம் இனி வளர்ச்சிக்கு தடையாக இருக்காது: பெய்ஜிங்கில் உள்ள பல்கலைக்கழகத்தில் பிரதமர் நரேந்திர மோடி பேச்சு

நிலம் கையகப்படுத்தும் சட்டம் நாட்டின் வளச்சிக்கு தடையாகவோ அல்லது விவசாயிகளுக்கு சுமையாகவோ இருப்பதை அனுமதிக்க மாட்டோம் என்று பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.

நிலம் கையகப்படுத்தும் சட்டத் திருத்த மசோதாவுக்கு பல்வேறு கட்சிகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வரும் வேளையில் பிரதமர் இவ்வாறு கூறியுள்ளார்.

3 நாள் பயணமாக சீனா சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி தனது பயணத்தின் 2-வது நாளான நேற்று பெய்ஜிங்கில் உள்ள ஸிங்ஹூவா பல்கலைக்கழகத்தில் உரையாற்றினார். அப்போது அவர் பேசும்போது, “எங்கள் வளங்கள் விரைவாகவும் வெளிப் படையாகவும் ஒதுக்கீடு செய்யப் படுகின்றன. நிலம் கையகப் படுத்துதல் நாட்டின் வளர்ச்சிக்கு தடையாக இருப்பதையோ அல்லது விவசாயிகளுக்கு சுமையாக இருப்பதையோ அனுமதிக்க மாட்டோம்” என்றார்.

மாநிலங்களவையில் எதிர்க்கட் சிகளின் கடும் எதிர்ப்பு காரணமாக, நிலம் கையகப்படுத்தும் மசோதாவை நாடாளுமன்ற கூட்டுக்குழுவின் பரிசீலனைக்கு அனுப்பவேண்டிய கட்டாயம் மத்திய அரசுக்கு ஏற்பட்டது. இந்நிலையில் இவ்வாறு அனுப்பி வைக்கப்பட்ட 3 நாட்களில் பிரதமர் இதனை தெரிவித்துள்ளார்.

இந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி மேலும் பேசியதாவது:

வேளாண் உற்பத்தியை பெருக்கவும், விவசாயிகள் தங்கள் வளமான வாழ்க்கையை மீட்கவும், வேளாண் துறையை நாங்கள் சீரமைத்து வருகிறோம்.

பெரிய அளவிலான சீர்திருத்தங்களை எனது அரசு செய்துவருகிறது. இந்தியாவில் ஏற்பட்டு வரும் மாற்றத்தை நீங்கள் உணர்வீர்கள். எங்கள் வளர்ச்சி விகிதம் மூலம் இதை நீங்கள் உணரலாம்.

இந்தியாவின் வளர்ச்சி விகிதம் தற்போது 7.5 சதவீதமாக உள்ளது. இது மேலும் அதிகரிக்கும் என சர்வதேச நிபுணர்கள் ஒருமித்த குரலில் கூறுவது எங்களை ஊக்கப்படுத்துகிறது.

அனைத்து மக்களுக்கும் வீட்டு வசதி, குடிநீர் மற்றும் சுகாதார வசதிகள் அளிப்பதில் காலவரம்புக்குட்பட்ட இலக்கு களை அரசு நிர்ணயிக்கிறது.

இது மக்களின் வாழ்க் கையை மட்டும் மாற்றி அமைக்காது. பொருளாதார செயல்பாடு களுக்கான புதிய ஆதாரங்களை உருவாக்கும்.

சர்வதேச தரத்திலான உற்பத்தி துறையுடன் இந்தியாவை நவீன பொருளாதாரமாக மாற்ற தனித்திறன் வாய்ந்த தொழி லாளர்களை இந்திய அரசு உருவாக்கி வருகிறது.

ஏழ்மையை அகற்றவும் ஏழைகளுக்கு பாதுகாப்பு அளிக்கவும் நவீன பொருளாதார சாதனங்களுடன் கூடிய பாரம்பரிய உத்திகளை நாங்கள் பயன்படுத்துறோம்

காப்பீடு மற்றும் வருங்கால வைப்பு நிதி திட்டங்கள் பரம ஏழைக்கும் சென்றடை வதை உறுதிப்படுத்தி வருகி றோம். இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x