வதோதராவில் மோடி 3 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி

வதோதராவில் மோடி 3 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி
Updated on
1 min read

பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி வதோதராவில் 3 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

நரேந்திர மோடி, குஜராத் மாநிலம் வதோதரா மற்றும் உத்தரப்பிரதேசம் வாரணாசி தொகுதியிலும் போட்டியிட்டார்.

இதில் வதோதரா தொகுதியில் மோடி அவரை எதிர்த்து போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் மதுசூதனன் மிஸ்த்ரியை விட 3 லட்சம் வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றார்.

குஜராத்தில் 26 தொகுதிகளில் 17 தொகுதிகளில் பாஜக முன்னிலையில் உள்ளது. காங்கிரஸ் 1 தொகுதியில் மட்டும் முன்னிலை வகிக்கிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in