Last Updated : 03 May, 2015 12:09 PM

 

Published : 03 May 2015 12:09 PM
Last Updated : 03 May 2015 12:09 PM

மும்பை போலீஸ் நிலையத்தில் இன்ஸ்பெக்டரை சுட்டுக்கொன்ற சப்-இன்ஸ்பெக்டர் தற்கொலை: விசாரணைக்கு முதல்வர் உத்தரவு

பணிக்கு வராததை கண்டித்ததால் ஆத்திரமடைந்த சப்-இன்ஸ் பெக்டர் ஒருவர் சீனியர் இன்ஸ் பெக்டரை சுட்டுவிட்டு தற் கொலை செய்துகொண்டார்.

பலத்த காயமடைந்த சீனியர் இன்ஸ்பெக்டர் மருத்துவமனையில் உயிரிழந்தார்.

மும்பை புறநகர் சாந்தா குரூஸ் பகுதியில் வகேலா என்ற இடத்தில் போலீஸ் நிலையம் உள்ளது. இங்கு சப்-இன்ஸ்பெக்டராக பணி யாற்றும் திலீப் ஷிர்கே (55) வெள்ளிக்கிழமை இரவு பணிக்கு வரவில்லை. மறுநாள் அவரை அழைத்த சீனியர் இன்ஸ் பெக்டர் விலாஸ் ஜோஷி (54), ஷிர்கே பொறுப்பற்ற முறையில் நடந்துகொள்வதாக கண்டித்துள் ளார். இதில் ஆத்திரமடைந்த ஷிர்கே தனது துப்பாக்கியால் விலாஸ் ஜோஷியை நோக்கி சுட்டு விட்டு, பின்னர் தன்னைத் தானே சுட்டுக்கொண்டு இறந்தார்.

ஷிர்கே சுட்டத்தில் 3 குண்டுகள் ஜோஷியின் அடிவயிறு மற்றும் முதுகுப் பகுதியில் பாய்ந்தன. மற்றொரு குண்டு அருகில் இருந்த வயர்லெஸ் ஆபரேட்டர் பாலாசாஹிப் ஆகிர் என்பவரின் தொடையில் பாய்ந்தது.

காயமடைந்த இருவரும் மருத் துவமனையில் சேர்க்கப்பட்டனர். அறுவை சிகிச்சை மூலம் இருவருக் கும் குண்டுகள் அகற்றப்பட்டன. எனினும் இதில் சிகிச்சை பலனின்றி விலாஸ் ஜோஷி உயிரிழந்தார்.

அவரது உடல் நேற்று அரசு மரியாதையுடன் எரியூட்டப் பட்டது. மகாராஷ்டிரா காவல் துறை தலைவர் சஞ்சீவ் தயாள் மும்பை போலீஸ் ஆணையர் ராகேஷ்மரியா, மூத்த காவல்துறை அதிகாரிகள் இதில் பங்கேற்றனர்.

இந்நிலையில், சம்பவம் பற்றி விரிவான விசாரணை அறிக்கை அளிக்கும்படி மும்பை போலீஸ் ஆணையர் ராகேஷ் மரியாவுக்கு முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் நேற்று உத்தரவிட்டார்.

இது தொடர்பாக முதல்வர் பட்னாவிஸ் கூறும்போது, “போலீ ஸாரின் மனோபாவங்களை ஆராய்ந்து, அவர்களின் மன அழுத்தத்தை குறைக்க நட வடிக்கை எடுக்கப்படியும் உத்தர விட்டுள்ளேன்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x