கிரிராஜ் சிங்கின் ஜாமீன் மனு தியோகர் நீதிமன்றம் நிராகரிப்பு
தேர்தல் பிரச்சாரத்தின்போது, சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாகக் குற்றம் சாட்டப்பட் டுள்ள பிஹார் மாநில பாஜக மூத்த தலைவர் கிரிராஜ் சிங்கின் முன் ஜாமீன் மனுவை தியோகர் நீதிமன்றம் சனிக்கிழமை நிராகரித் தது.
கடந்த ஏப்ரல் 18-ம் தேதி ஜார்க்கண்ட் மாநிலத்தில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட கிரிராஜ் சிங், பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடியை எதிர்ப்பவர் கள் தேர்தலுக்குப் பிறகு பாகிஸ் தானுக்குச் செல்ல வேண்டும் என தெரிவித்தார். இதற்கு பல்வேறு அரசியல் கட்சிகளும் கடும் கண் டனம் தெரிவித்தன.
இதுதொடர்பாக, தியோகர், பொகாரோ ஆகிய 2 காவல் நிலையங்களில் இவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதன் அடிப்படையில், ஏப்ரல் 23-ம் தேதி பொகாரோ நீதிமன்றம் கைது வாரன்ட் பிறப்பித்தது.
இந்நிலையில், தியோகர் மாவட்ட மற்றும் செஷன்ஸ் நீதிமன்றத் தில் ஜாமீன் கோரி விண்ணப்பித் திருந்தார். இதை விசாரித்த நீதிபதி பங்கஜ் வாஸ்தவா, கிரிராஜ் சிங்கின் ஜாமீன் மனுவை சனிக்கிழமை நிராகரித்தார். முன்னதாக, பொகாரோ நீதிமன்றம் பிறப்பித்த கைது வாரன்ட்டை ஜார்க்கண்ட் உயர் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை ரத்து செய்தது. எனவே, தியோகர் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து கிரிராஜ் ஜார்க்கண்ட் உயர் நீதிமன் றத்தில் முறையிடுவார் எனத் தெரிகிறது.
இதே குற்றச்சாட்டின் கீழ் பாட்னா விமான நிலைய காவல் நிலையத்திலும் கிரிராஜ் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. எனினும், இந்த வழக்கில் பாட்னா மாவட்ட மற்றும் செஷன்ஸ் நீதிமன்றம் முன் ஜாமீன் வழங்கியுள்ளது.
