

வங்கதேசத்தைச் சேர்ந்த ரஷிதா பேகம் (58) என்பவர் தனது கணவரின் சிகிச்சைக்காக கடந்த வாரம் பெங்களூரு வந்துள்ளார். எலக்ட்ரானிக்ஸ் சிட்டி அருகில் உள்ள தனியார் மருத்துவமனை யில் கணவரை அனுமதித்துவிட்டு, நேற்று அருகில் உள்ள 'டி-மார்ட்' என்கிற ஷாப்பிங் மாலுக்கு சென்றுள்ளார். அங்கு உடைகள், செருப்பு, பழங்கள் வாங்கிய பிறகு பணம் செலுத்திவிட்டு, வெளியே செல்ல முயன்றுள்ளார்.
அப்போது பாதுகாவலர்கள் அவரைத் தடுத்து பையை சோதித்த போது, பணம் செலுத்தாத செருப்பு இருந்தது. இதையடுத்து செருப்பைத் திருடியதாகக் கூறி அவரை அழைத்துச் சென்று ஆடை களை களைந்து சோதித்துள்ளனர். இதற்கு ரஷிதா பேகம் ஆட்சேபம் தெரிவித்ததால், அவரை சரமாரி யாக தாக்கியுள்ளனர். மேலும் அவரிடம் இருந்த ரூ. 65 ஆயிரம் பணத்தையும் பறித்துக் கொண்டு வெளியே அனுப்பியுள்ளனர்.
இதனால் ரஷிதா பேகம் ஹெப்பகுடி காவல்நிலையத்தில் புகார் அளித்தார். அதில், 'வங்க தேசத்தில் இருந்த வீட்டை விற்று எனது கணவரின் சிகிச்சைக்காக பெங்களூருவுக்கு வந்தேன். ரூ. 65 ஆயிரம் பணத்தை எடுத்துக் கொண்டு அத்தியாவசிய பொருட் கள் வாங்க, டி-மார்ட் ஷாப்பிங் மாலுக்கு சென்றேன். நான் வாங்கிய பொருட்கள் அனைத்தும் கூடையில் வைத்து பில் போட கொடுத்தேன். பில் போடப்பட்ட போது தவறுதலாக நான் வாங்கிய செருப்பை சேர்க்கவில்லை.
இந்நிலையில் நான் செருப்பை திருடியதாக பாதுகாவலர்கள் எனது ஆடைகளை களைத்து அவமானப்படுத்தினர். அதற்கு எதிர்ப்பு தெரிவித்த போது என்னை சரமாரியாக தாக்கி பையில் இருந்த ரூ. 65 ஆயிரம் பணத்தையும், எனது பாஸ்போர்ட்டையும் பறித்துக் கொண்டனர்'' என தெரிவித்துள்ளார்.
இதையடுத்து வழக்கு பதிவு செய்துள்ள ஹெப்பகுடி போலீஸார் ஷாப்பிங் மால் பாதுகாவலர்கள் 2 மீதும், மஞ்சுளா என்பவர் மீதும் வங்கதேச பெண்ணைத் தாக்கி, சித்ரவதை செய்ததாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அப்போது ஷாப்பிங் மால் நிர் வாகம் தாங்கள் அந்த பெண் மணியை தாக்கவில்லை. ஏதேனும் பொருட்கள் இருக்கிறதா? என்று மட்டுமே தேடினோம் என தெரி வித்துள்ளது. ஆனால் அங்கிருந்த கண்காணிப்பு கேமரா பதிவுகளை சோதித்துப்பார்த்த போது, வங்க தேச பெண்மணியை ஆடையைக் களைந்து, அடித்து சித்ரவதை செய்து தெரியவந்துள்ளது.