

பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந் திர மோடியை இயக்கும் ரிமோட் கண்ட்ரோலாக ஆர்.எஸ்.எஸ். செயல்படுகிறது என்று காங்கிரஸ் தெரிவித்துள்ளது.
மக்களவை இறுதிக்கட்ட தேர்த லுக்கான பிரச்சாரம் சனிக்கிழமை நிறைவடைந்தது. அன்றைய தினம் மாலை டெல்லி வந்த நரேந் திர மோடி ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பாகவத்தை சந்தித்துப் பேசினார். இதுகுறித்து காங்கிரஸ் மூத்த தலைவர் அபிஷேக் சிங்வி டெல்லியில் கூறியதாவது:
ஆர்.எஸ்.எஸ். தலைமையிடம் நாக்பூரில் உள்ளது. அங்கிருந்து தான் பாஜக தலைவர்கள் இயக்கப் படுகிறார்கள். பாஜக பிரதமர் வேட் பாளருக்கு 56 அங்குல மார்பு மட்டுமே உள்ளது. அவரை இயக்கு வது எல்லாம் ஆர்.எஸ்.எஸ்.தான். 2004, 2009 பொதுத்தேர்தல்களில் காங்கிரஸ் வெற்றி பெறாது என்று கூறினார்கள். ஆனால் அந்தத் தேர்தல்களில் காங்கிரஸ் வெற்றி வாகை சூடி ஆட்சி அமைத்தது. அதேபோல் இப்போதும் காங் கிரஸ் ஆட்சியைக் கைப்பற்றும். என்றார்.