Published : 28 May 2014 09:18 AM
Last Updated : 28 May 2014 09:18 AM

குழந்தைகளுக்கு மோடி பெயரை வைத்த முன்னாள் அமைச்சர்: பெற்றோர் போலீஸில் புகார்

மோடி பிரதமராக பதவியேற்ற பொழுது மைசூரில் பிறந்த 2 குழந்தைகளுக்கு முன்னாள் பா.ஜ.க. அமைச்சர் ராமதாஸ் மோடியின் பெயரை சூட்டினார். பெற்றோரின் அனுமதியில்லாமல் குழந்தைகளுக்கு மோடியின் பெயரை அவர் சூட்டியதால் அந்தக் குழந்தைகளின் பெற்றோரும், உறவினர்களும் போலீஸில் புகார் அளித்துள்ளனர்.

மோடி பிரதமராக பதவியேற்ற அடுத்த சில நிமிடங்களில் மைசூரில் உள்ள அரசு செலுவம்பா மகப்பேறு மருத்துவமனையில் ஓர் ஆண் குழந்தையும், பெண் குழந்தையும் பிறந்தன.

அப்போது மருத்துவமனைக்கு வந்த கர்நாடக மாநில முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சரும், பா.ஜ.க. தலைவருமான எஸ்.ஏ. ராமதாஸ், அங்கிருந்த அனை வருக்கும் இனிப்பு வழங்கினார்.

அதனைத் தொடர்ந்து அவரது ஆதரவாளர்களின் வேண்டு கோளுக்கிணங்க அங்கு பிறந்த ஆண் குழந்தைக்கு `நரேந்திர கிருஷ்ணா மோடி' என்றும், பெண் குழந்தைக்கு `தன்மயி மோடி' எனவும் பெயரை சூட்டினார். அந்த குழந்தைகளுக்கு காவி நிறத்தில் புதிய உடைகளையும் வழங்கினார்.

ராமதாஸ் தொடர்ந்து பேசுகை யில், `இந்தியாவின் பிரதமர் பெயரை தனது பெயராக கொண் டிருக்கும் இந்த இரு குழந்தை களின் முழுக் கல்வி செலவை யும் நானே ஏற்கிறேன். மேலும் ஏழ்மையில் வாடும் அவர்க ளுடைய பெற்றோருக்கும் விரை வில் நல்ல வேலைக்கு ஏற்பாடு செய்கிறேன். அவர்களும் மோடி போல நாட்டை ஆளும் வல்லவர் களாக வளர வேண்டும்'' என கூறியுள்ளார்.

போலீஸில் புகார்

இந்நிலையில் மோடியின் பெயரைச் சூட்டிய அந்த இரு குழந்தைகளின் பெற்றோரும், உறவினர்களும் எஸ்.ஏ.ராமதாஸ் மீது போலீஸில் புகார் அளித்துள் ளனர்.

இது தொடர்பாக தன்மயி மோடி என்ற குழந்தையின் தந்தை மஞ்சுநாத் கவுடா பேசுகையில், ``குழந்தை பிறந்தபோது நான் மருந்து வாங்க வெளியே சென்றிருந்தேன். அப்போது குழந் தைக்கு பெயர் சூட்டியுள்ளார். என்னுடைய மனைவியிடமோ, உறவினர்களிடமோ கூட அனுமதி பெறவில்லை.

அதுமட்டுமில்லாமல் ஏற் கெனவே பெண்கள் விவகாரத்தில் சிக்கி, தற் கொலைக்கு முயற்சித்தவர் ராமதாஸ். அவர் மீது ஏகப்பட்ட அவப்பெயர்கள் இருக்கிறது. இப் படிப்பட்ட ராமதாஸுக்கு என் னுடைய குழந்தைக்கு பெயர் வைக்கும் தகுதியில்லை.

நான் என்னுடைய தாயின் பெயரையே குழந்தைக்கு சூட்ட நினைத்தேன். இப்போது மருத்துவமனையும் அவர் சூட்டிய பெயரையே பிறப்பு சான்றிதழில் குறிப்பிட உள்ளது. அதனால் அவர் மீது நடவடிக்கை எடுக்குமாறு புகார் அளித்துள்ளேன்'' என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x