ஓராண்டு நிறைவு பொதுக்கூட்டம்: பிரதமர் மோடியின் உரையிலிருந்து 10 மேற்கோள்கள்

ஓராண்டு நிறைவு பொதுக்கூட்டம்: பிரதமர் மோடியின் உரையிலிருந்து 10 மேற்கோள்கள்
Updated on
1 min read

மதுராவில் உள்ள நாக்லா சந்த்ரபான் கிராமத்தில் பாஜக ஆட்சியின் ஓராண்டு நிறைவு விழாவை ஒட்டி நடந்த பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி உரையிலிருந்து 10 முக்கிய அம்சங்கள்.

நாடு முழுதும் திட்டமிடப்பட்ட 200 பொதுக்கூட்டங்களில் இது ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.

மோடியின் உரையிலிருந்து 10 மேற்கோள்கள்:

365 நாட்களின் பணி பற்றி நான் பேசும் போது, அதனை நிறைவேற்ற 365 நிமிடங்கள் போதுமானது. நான் விடுப்பு எடுத்துக் கொள்வதில்லை என்று ஏற்கெனவே கூறியிருந்தேன், மாறாக நான் முடிவுகளை எடுக்கிறேன்.

இந்தியாவில் சட்டங்கள் காடாக வளர்ந்து கிடக்கிறது. வரும் எதிர்காலத்தில் 1,300 சட்டங்கள் நீக்கப்படும்.

விவசாயிகள் தற்கொலை செய்து கொள்வதை நான் அரசியலாக்க விரும்பவில்லை, மாறாக சுதந்திரம் அடைந்து 60 ஆண்டுகளுக்கு மேலாகியும் நம் விவசாயிகள் ஏன் பிரச்சினையில் தத்தளிக்கிறார்கள் என்பதற்கு தீர்வு காண விரும்புகிறேன்.

நான் இந்நாட்டின் பிரதம மந்திரி அல்ல, நான் பிரதம காவலன்.

அரசு மாறாவிட்டால் மாற்றம் வர முடியுமா? ஐக்கிய முற்போக்கு கூட்டணி அதிகாரத்தில் இருந்த போது நாடு சுபிட்சமாக இருந்ததா?

கடந்த ஆண்டில் ஊழல் ஏதாவது நடந்திருக்கிறதா? அரசியல்வாதிகளின் வாரிசுகள் பற்றிய செய்தி ஏதாவது வந்துள்ளதா?

கங்கை, யமுனையும் என் தாய் போன்றவர்கள், இந்த நதிகளை சுத்தம் செய்வோம், இதற்கு மக்களின் உதவி தேவை.

2014-இல் தேர்தல் வரவில்லை என்றால், இந்த ஓராண்டில் இந்த நாடு மேலும் எவ்வளவு மூழ்கியிருக்கும்?

எங்கள் ஆட்சியின் 365 நாட்கள் பற்றி மக்களுக்கு நாம் அறிவிக்க வேண்டும் என்று கட்சியினரிடத்தில் நான் அறிவுறுத்தியுள்ளேன்.

தீன் தயால் தம்மிலிருந்து கிராமங்களை எப்படி முன்னேற்றுவது, பெண்களுக்கான அதிகாரம், குழந்தைகளின் கல்வி ஆகியவற்றை மக்கள் கற்றுக் கொள்ளலாம்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in