

சி.பி.எஸ்.இ. பிளஸ் 2 தேர்வு முடிவுகள் ஏற்கெனவே அறிவிக்கப்பட்டபடி சரியாக பகல் 12 மணிக்கு இணையத்தில் வெளியிடப்பட்டது.
மாணவர்கள் தங்கள் தேர்வு முடிவுகளை www.results.nic.in, www.cbseresults.nic.in and www.cbse.nic.in என்ற இணையதளங்களில் தெரிந்து கொள்ளலாம்.
மேலும், தங்கள் தேர்வு முடிவுகளை மாணவர்கள், தொலைபேசியிலும் தெரிந்து கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அதன்படி, 24300699 (டெல்லி), நாட்டின் பிற பகுதிகளுக்கு 011-24300699 ஆகிய எண்களை தொடர்பு கொண்டு மாணவர்கள் தங்கள் மதிப்பெண் விவரங்களை தெரிந்து கொள்ள முடியும்.
எம்.டி.என்.எல். தொலைபேசி வாடிக்கையாளர்கள் 28127030 (டெல்லி) நாட்டின் பிற பகுதிகளில் இருந்து 011-28127030 ஆகிய எண்களை தொடர்பு கொண்டு முடிவுகளை தெரிந்து கொள்ள ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
சென்னைக்கு 2-ம் இடம்:
சிபிஎஸ்இ பிளஸ் 2 தேர்வில் டெல்லி சாகேத் பகுதியில் உள்ள நியூ கிரீன் ஃபீல்டு பள்ளி மாணவி எம்.காயத்ரி 500க்கு 496 மதிப்பெண்கள் பெற்று தேசிய அளவில் முதலிடத்தைப் பிடித்துள்ளார்.
இந்த ஆண்டு மொத்த தேர்ச்சி மொத்த தேர்ச்சி விகிதம், 82%. கடந்த ஆண்டு தேர்ச்சி விகிதம் 82.07% ஆக இருந்தது. வழக்கம் போல் இந்த ஆண்டும் மாணவர்களை விட மாணவிகளே அதிக அளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. மாணவிகளில் 87.56 சதவீதம் பேரும், மாணவர்களில் 77.77 சதவீதம் பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
திருவனந்தபுரம் பிராந்தியத்தியத்தில் 95.41% மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். மொத்த தேர்ச்சி விகிதத்தில் திருவனந்தபுரம் பிராந்தியம் முதலிடத்தைப் பிடித்துள்ளது. இரண்டாவது இடத்தில், 82% தேர்ச்சி விகிதத்துடன் சென்னை பிராந்தியம் உள்ளது.