உச்ச நீதிமன்ற நீதிபதி தலைமையில் ஆந்திர என்கவுன்ட்டர் விசாரணை: மாநிலங்களவையில் கனிமொழி வலியுறுத்தல்

உச்ச நீதிமன்ற நீதிபதி தலைமையில் ஆந்திர என்கவுன்ட்டர் விசாரணை: மாநிலங்களவையில் கனிமொழி வலியுறுத்தல்
Updated on
1 min read

ஆந்திர மாநிலம் சேஷாசலம் வனப்பகுதியில் 20 தமிழர்கள் சுட்டுக்கொல்லப்பட்ட விவகாரத் தில் உச்ச நீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணை நடத் தப்பட வேண்டும் என மாநிலங் களவையில் திமுக எம்.பி. கனிமொழி வலியுறுத்தினார்.

இது தொடர்பாக மாநிலங் களவையில் அவர் பேசியதாவது:

ஆந்திரத்தில் சுட்டுக் கொல்லப் பட்ட இருபது தமிழர்களையும் செம்மரக் கடத்தல்காரர்கள், மாஃபியாக்கள் என்று பலரும் தங்கள் அனுமானத்தின்படி பெயர் சூட்டிக் கொண்டிருக் கிறார்கள். கடத்தல்காரர்கள் என்று முத்திரை குத்தி இருபது தமிழர்களையும் ஆந்திர போலீஸார் சுட்டுக் கொன்றுவிட்டனர்.

கொல்லப்பட்ட 20 தமிழர்களும் காட்டுக்குள் வைத்து சுட்டுக் கொல்லப்படவில்லை. அவர்கள் தமிழக, ஆந்திர எல்லையில் பேருந்துகளில் இருந்து வலுக் கட்டாயமாக இறக்கப்பட்டு குறிப் பிட்ட சில இடங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டிருக் கிறார்கள். அங்கே வைத்து சுட்டுக் கொல்லப்பட்டு, பின்பு காட்டுக்குள் கிடத்தப்பட்டிருக் கிறார்கள்.

பேருந்தில் இருந்து கட்டாய மாக இறக்கப்பட்ட தமிழர்கள் சில நாட்கள் அதிகாரபூர்வமற்ற பிடியில் வைக்கப்பட்டு, மிக அருகில் இருந்து சுட்டுக் கொல்லப்பட்டிருக்கிறார்கள்.

உண்மையான செம்மரக் கடத்தல்கார்கள் பண பலம் மிக்கவர்கள் என்பதால் அவர்கள் பாதுகாக்கப்படுகிறார்கள். ஆனால் ஏதும் அறியாத ஏழைக் கூலித் தொழிலாளர்கள் பழிபோடப்பட்டு சுட்டுக் கொல்லப்பட்டிருக்கிறார்கள்.

எனவே இந்த சம்பவத்தில் நாங்கள் மிக நேர்மையான, வெளிப்படையான விசா ரணையை எதிர்பார்க்கிறோம். உச்ச நீதிமன்ற நீதிபதி தலைமையில் இந்த சம்ப வத்தை விசாரித்து உண்மை களைக் கண்டறியவேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in