

சல்மான் கான் ஒரு நடிகர் என்பதால் அவருக்கு அதிகப்படியாக தண்டனை வழங்க வேண்டாம் என அவரது வழக்கறிஞர் வாதாடினார்.
கடந்த 2002-ல் மது அருந்திவிட்டு காரை ஓட்டி விபத்து ஏற்படுத்திய வழக்கில் இந்தி நடிகர் சல்மான் கானுக்கு மும்பை நீதிமன்றம் 5 ஆண்டு சிறைத் தண்டனை விதித்துள்ளது.
இந்நிலையில், சல்மான் கானுக்கு தண்டனை வழங்குவது தொடர்பான வாதத்தின் போது சல்மான் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், "சல்மான் கான் ஒரு நடிகர் என்பதால் அவருக்கு அதிகப்படியாக தண்டனை வழங்க வேண்டாம்.
அவருக்கு விதிக்கும் அபராதத்தை வேண்டுமென்றால் அதிகரித்துக் கொள்ளுங்கள். ஆனால், அவருக்கு 3 ஆண்டுகளுக்கு மேல் சிறைத் தண்டனை வழங்காதீர்கள்.
சல்மான் கான், பியீங் ஹீயூமன் என்ற தொண்டு நிறுவனத்தை நடத்தி வருகிறார். அவரது சம்பாத்தியத்தில் பெரும் பங்கு அந்த தொண்டு நிறுவனம் மூலமாக நற்பணிகளுக்கு செலவிடப்படுகிறது. எனவே, சல்மான் கானுக்கு அதிகப்படியாக தண்டனை வழங்க வேண்டாம்" எனக் கூறியுள்ளார்.