

பருவம் தவறிய மழையால் தன் நிலத்தில் விளைந்த பயிர்கள் நாசமானதைக் கண்ட அதிர்ச்சியில் விவசாயி ஒருவர் பலியாகியுள்ளார்.
உத்தரப் பிரதேச மாநிலம் பல்லியா நகரத்தில் உள்ள நத்னா எனும் கிராமத்தில் இந்தச் சோகம் நிகழ்ந்துள்ளது. இதுகுறித்து அந்நகரத்தின் துணை கோட்ட அதிகாரி ராமானுஜ் சிங் கூறும்போது, "இறந்து போன விவசாயியின் குடும்பத்தார் அளித்துள்ள தகவல் படி, வெள்ளிக்கிழமை இரவு தன்னுடைய நிலத்தில் விளைந்த கோதுமைப் பயிர்கள் பருவம் தப்பிய மழையால் நாசமானதைக் கண்ட அதிர்ச்சியில் அவர் உயிரிழந்திருக்கிறார் என்று தெரிய வந்துள்ளது. அவரது வயது 65" என்றார்.
மேலும் அவர், இறந்துபோன விவசாயியின் குடும்பத்துக்கு முதல்வர் நிதியில் இருந்து இழப்பீடு பெறுவதற்கு அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும் என்றார்.