Published : 08 May 2015 08:04 AM
Last Updated : 08 May 2015 08:04 AM

அவதூறு வழக்கிற்கான சட்டப்பிரிவுகளை நீக்க எதிர்ப்பு

வழக்கு போடுவதற்கு வகை செய்யும் இந்திய தண்டனை சட்டப் பிரிவு 499, 500-ஐ முழுமையாக நீக்குவதற்கு வழக்கறிஞர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

அரசியல் கட்சித் தலைவர்கள் மீது அடிக்கடி அவதூறு வழக்குகள் தொடரப்படுகின்றன. இதை எதிர்த்து உயர் நீதிமன்றங்கள் மற்றும் உச்ச நீதிமன்றத்தில் ஏராளமான வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்த நிலையில் அவதூறு வழக்கு தொடர வகை செய்யும் இந்திய தண்டனை சட்டப்பிரிவு 499, 500-ஐ முழுமையாக ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கை பரவலாக வலுத்து வருகிறது.

இதுகுறித்து சென்னை உயர் நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் பி.வில்சன் கூறியபோது, “ஜனநாயக நாட்டில் கருத்து மற்றும் பேச்சு சுதந்திரம் இருக்கிறது. இது, அரசிய லமைப்புச் சட்டம் வழங்கியிருக்கும் அடிப் படை உரிமைதான். அதற்காக வரம்புமீறி பேசக்கூடாது. ஒருவரைப் பற்றி நாகரிகமாக விமர்சிக்கலாம். அதைவிடுத்து கேவல மாகவோ, இழிவாகவோ பேசுவதை எப்படி ஏற்க முடியும்? அரசியல் காரணங் களுக்காக, உள்நோக்கத்துக்காக அதிகார துஷ்பிரயோகம் செய்து அவதூறு வழக்கு கள் போடுவதை தடுக்கும்படி நீதிமன்றத்தில் முறையிடலாம். அவதூறு வழக்கு போடு வதற்கு வகை செய்யும் இந்திய தண்டனை சட்டப்பிரிவு 499, 500-ஐ முழுமையாக நீக்க வேண்டும் என்று கோருவது சரியில்லை” என்றார்.

மத்திய அரசு மூத்த வழக்கறிஞர் பி.ரபுமனோகர் கூறியதாவது: “மற்ற மாநிலங் களைவிட தமிழகத்தில் அவதூறு வழக்கு கள் அதிகமாக போடப்படுகின்றன. பொதுக் கூட்டத்தில் அவதூறாகப் பேசினால், சம்பந்தப் பட்டவர் மீது அவ்வளவாக அவதூறு வழக்கு கள் போடப்படுவதில்லை. ஏனென்றால் அதை நீதிமன்றத்தில் நிரூபிப்பது சிரமம். ஆனால் அந்தப் பேச்சே பத்திரிகைகளில் பிரசுரமானால் சர்வசாதாரணமாக அவதூறு வழக்கு போட்டுவிடுகிறார்கள். இதுபோன்ற நேரங்களில் பத்திரிகைகள் மீதும் அவதூறு வழக்குகள் போடப்படுகின்றன. அதனால் பத்திரிகைகளும் பாதிப்புக்குள்ளாகின்றன.

அரசியல் கட்சித் தலைவர் ஒருவரின் நற்பெயருக்கு தனிப்பட்ட முறையில் களங்கம் ஏற்பட்டால், அரசு இயந்திரத்தைப் பயன்படுத்தி அவதூறு வழக்கு தொடரக் கூடாது. சம்பந்தப்பட்ட அரசியல் கட்சித் தலைவரே நீதிமன்றத்தில் நேரில் வழக்கு தொடர வேண்டும். அந்த நிலை உருவானால், அவதூறு வழக்குகள் எண்ணிக்கை கணிசமாகக் குறையும். தங்களது பெயருக்கு உண்மையிலேயே களங்கம் ஏற்பட்டால் மட்டுமே கட்சித் தலைவர்கள் அவதூறு வழக்கு தொடர முன்வருவார்கள். அரசியல் கட்சித் தலைவர்கள் மீது உள்நோக்கத்துக்காக அவதூறு வழக்கு தொடரப்படுகிறது என்று கூறி, இந்திய தண்டனை சட்டப்பிரிவு 499, 500-ஐ முழுமையாக நீக்கக் கோருவதை ஏற்க முடியாது. அப்படி நீக்கினால், பொதுமக்களை யாராவது தனிப்பட்ட முறையில் அவமரியாதையாகப் பேசினால் அவர்கள் நிவாரணம் தேட முடியாமல் போகும்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x